
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அந்த அணிக்காக அறிமுகமாகி இதுவரை 112 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகள் மற்றும் 110 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2009-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 184 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக மிகச் சிறப்பான துவக்க வீரராக இருந்த அவர் 38 வயதான நிலையில் இன்றளவும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக உலகெங்கிலும் நடைபெற்று வரும் பல்வேறு லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட “தி ஹன்ட்ரெட்” தொடரிலும் முதல் முறையாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 51 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 71 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த ரன்கள் மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் டேவிட் வார்னர் நிகழ்ச்சியை சாதனை யாதெனில் : இதுவரை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி தற்போது டேவிட் வார்னர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 414 போட்டிகளில் பங்கேற்று 397 இன்னிங்ஸ்கலில் 9 சதம் மற்றும் 105 அரைசதம் என 13,543 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வார்னர் 419 போட்டிகளில் விளையாடி13,545 ரன்கள் குவித்து விராட் கோலியை தாண்டியுள்ளார். இதில் 8 சதம் மற்றும் 113 அரைசதங்கள் அடங்கும்.
இதையும் படிங்க : இஷான் கிஷனும் இல்ல.. துருவ் ஜுரேலும் இல்ல.. சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக வரும் ஆர்.சி.பி வீரர் – விவரம் இதோ
உலகளவில் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் பங்கேற்று 455 இன்னிங்ஸ்களில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.