வீடியோ : 1086 நாட்கள் கழித்து சரித்திரம் படைத்த டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங்கை மிஞ்சி 100இல் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை

David Warner 200
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக காபாவில் சுமாரான பிட்ச்சில் வெறும் 2 நாட்களில் முடிந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதியன்று பாக்ஸிங் டே போட்டியாக உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 189 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் டீன் எல்கர் 26, எர்வீ 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேரின் 52 ரன்களும் மார்கோ யான்சென் 59 ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 1 ரன்னில் அவுட்டான நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

100இல் 200:
அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் 45/1 என்ற நிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மார்னஸ் லபுஸ்ஷேன் 14 ரன்களில் ரன் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரமாக நின்று ரன்களை சேர்த்தார். அவருடன் அடுத்து வந்த நம்பிக்கையை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் கைகோர்த்து சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி சிறப்பாக ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சற்று அதிரடி காட்டிய டேவிட் வார்னர் 2020க்குப்பின் சுமார் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னுடைய 25வது டெஸ்ட் சதத்தை விளாசி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

கடைசியாக கடந்த 2020 ஜனவரி 3ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்திருந்த அவர் அதன் பின் கடந்த 1086 நாட்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடி இந்த வருடம் ஆசிய கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கையின் நாயகன் விராட் கோலி 1021 நாட்கள் கழித்து சதமடித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கியது போலவே அவரும் சதமடித்து விமர்சனங்களை தூள் தூளாக்கியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பவுண்டரியுடன் சதத்தை தொட்ட அவர் வழக்கம் போல சீறிப்பாய்ந்து காற்றில் சூப்பர் மேன் போல பஞ்ச் கொடுத்து கொண்டாடியது பார்முக்கு திருப்பி விட்டார் என்பதை உணர்த்தி அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அதை விட தன்னுடைய 100வது போட்டியாக அமைந்த இப்போட்டியில் சதமடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டியில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையும் 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த ஜோடி தென்னாப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 3வது விக்கெட்டுக்கு 275 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது சதத்தை நெருங்கைய ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அவுட்டாகாமல் அடம் பிடித்து 150 ரன்களை கடந்த வார்னர் மேலும் செட்டிலாகி அற்புதமாக பேட்டிங் செய்து இரட்டை சதமடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2006 ஆம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். உலக அளவில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டுக்கு பின் (இந்தியாவுக்கு எதிராக, 2021இல்) 100வது டெஸ்டில் 2வது சதமடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்கIND vs SL : சம்சு சாம்சனுக்காக ரிஷப் பண்டிற்கு ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – இதுதான் கரெக்ட்

அப்படி 1086 நாட்களாக சதமடிக்காமல் இருந்ததால் சந்தித்த விமர்சனங்களுக்கு சரியான மாஸ் பதிலடி கொடுக்கும் வகையில் இரட்டை சதமடித்த அவர் அதை வெறித்தனமாக மீண்டும் சூப்பர் மேன் போல தன்னை மிஞ்சிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டாடினார். அதனால் தசை பிடிப்பை சந்தித்த அவர் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 200* (254) ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரது அதிரடியால் 150 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா 338/3 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

Advertisement