அல்வா கேட்ச் விட்ட பாகிஸ்தான் வீரர்.. அடித்து நொறுக்கி சதமடித்த வார்னர்.. மார்ஷுடன் சேர்ந்து மாஸ் சாதனை

Usma Mir Catch
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்தியாவிடம் கடந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மறுபுறம் 2 தோல்வி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்த ஆஸ்திரேலியாவும் வெற்றி பாதிக்கும் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலைமையில் பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்க்கும் எண்ணத்துடன் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்க தொடங்கினார்கள்.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:
ஆனால் அப்போது ஷாஹீன் அப்ரிடி வீசிய ஓவரில் டேவிட் வார்னர் வெறும் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை பாகிஸ்தான் வீரர் உஷாமா மிர் அல்வா போல கைக்கு வந்தும் கோட்டை விட்டார். அதை பயன்படுத்திய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அவர்களை பந்தாடி வேகமாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார். அவருடன் சேர்ந்து மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 50 ரன்கள் கடந்தார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியான பேட்டிங்கை கைவிடாமல் அசத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்து பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. அதே வேகத்தில் அதிரடியை குறைக்காமல் பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் முதலாவதாக டேவிட் வார்னர் சதமடித்த நிலையில் அடுத்த பந்திலேயே மிட்சேல் மார்ஷ் சதமடித்து 121 (108) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அத்துடன் சற்று முன் வரை 33.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 259/1 ரன்கள் குவித்து மிரட்டி வருகிறது. அதை விட 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் – மிட்சேல் மார்ஷ் ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆஸ்திரேலிய ஓப்பனிங் ஜோடி என்ற 12 வருட சாதனையை தகர்த்து மாபெரும் புதிய சாதனையை படைத்துள்ளது.

இதையும் படிங்க: உங்களால என்னோட கண்ணு போயிருக்கும்.. 2007 பின்னணியை ஆதாரத்துடன் பகிர்ந்து பாகிஸ்தானை விளாசிய பதான்

இதற்கு முன் கடந்த 2011 உலக கோப்பையில் இதே பெங்களூரு மைதானத்தில் கனடா அணிக்கு எதிராக ஷேன் வாட்சன் – ப்ராட் ஹாடின் ஆகியோர் 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு உலகக்தரம் வாய்ந்த அட்டாக்கை கொண்டுள்ள அணியாக கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடும் அந்த ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு போட்டியில் அற்புதமான துவக்கத்தை கொடுத்துள்ளது.

Advertisement