IPL 2023 : அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது பற்றி வார்னர், ராகுல் அவர்கிட்ட கத்துக்கணும் – இந்திய வீரரை பாராட்டிய ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதே வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 40 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பதை 20 பந்துகளில் 40 ரன்கள் எடுப்பது டி20 கிரிக்கெட்டில் வெற்றியை தலைகீழாக மாற்றக் கூடியதாக கருதப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலும் கடைசி ஓவர் வரை செல்லும் டி20 போட்டிகளில் வெற்றி என்பது 20 – 10 ரன்கள் முதல் வெறும் 1 ரன்னில் கடைசி பந்தில் கைமாறக்கூடியதாக இருந்து வருகிறது.

KL Rahul

- Advertisement -

அந்த நிலைமையில் 2018 காலகட்டங்களில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியில் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த கேஎல் ராகுல் ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள முன்பை விட சிறப்பாக செயல்பட வேண்டிய அவர் அதிரடி ஆட்டத்தை மறந்து பெரிய ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி சாதனைகளை படைத்தாலும் தனது அணி வெற்றி பெறும் அளவுக்கு விளையாடுவதில்லை என ரசிகர்கள் விமர்சித்தனர்.

ஹர்பஜன் அட்வைஸ்:
சொல்லப்போனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு காரணமாகும் வகையில் செயல்பட்ட அவர் இந்திய அணியில் துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்து நிற்கிறார். அதனால் இந்த தொடரில் அதிரடியாக விளையாட வேண்டிய அவர் கொஞ்சமும் முன்னேறாமல் 194 ரன்களை 114.79 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வருவத்துடன் தன்னுடைய அணுகுமுறை சரியே என்று ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.

Warner

அதே போல் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் கேப்டனாக செயல்பட்டு வரும் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் இந்த வருடம் 228 ரன்களை 116.92 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து டெல்லி தன்னுடைய முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்திக்க காரணமாகும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால் 25 பந்தில் 50 ரன்கள் எடுக்க தவறினால் ஐபிஎல் விளையாட வராதீர்கள் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படையாக விமர்சித்தார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் குர்பாஸ் 8, ஜெகதீசன் 0 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியும் 203.92 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் கொல்கத்தாவுக்கு 15 வருடங்கள் கழித்து 2வது சதமடித்த வீரராக சாதனை படைத்த வெங்கடேஷ் ஐயரை பார்த்து வார்னர் மற்றும் ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டுமமென முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Venkatesh Iyer

“வெங்கடேஷ் ஐயர் தாம் ஒரு ஸ்பெஷல் வீரர் என்பதை இந்த ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதமடித்து நிரூபித்துள்ளார். டேவிட் வார்னர், கேஎல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் அவரிடம் சில முக்கியமான அம்சங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தனது அணியை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் அடித்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற பரிதாப நிலை காணப்படுகிறது. குறிப்பாக ஹைதெராபாத்துக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக அவர் 99 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் வெற்றி காண முடியவில்லை.

Harbhajan

இதையும் படிங்க:PBKS vs RCB : போராடிய ஜிதேஷ், அனலை பறக்க விட்ட சிராஜ் – விராட் கோலி கேப்டன்ஷிப்பில் மிரட்டிய ஆர்சிபி

அது பற்றி ஹர்பஜன் மேலும் பேசியது பின்வருமாறு. “பேட்டிங் துறையில் பஞ்சாப் பெரும்பாலும் தங்களுடைய கேப்டன் ஷிகர் தவானை நம்பியிருப்பது கவலைக்குரிய விஷயமாகும். பொதுவாக ஒரு வீரரை நீங்கள் நம்பியிருந்தால் ஓரிரு போட்டிகளை வெல்லலாம். ஆனால் ஐபிஎல் போன்ற பெரிய தொடரை வெல்ல முடியாது. எனவே கோப்பையை வெல்ல இதர பஞ்சாப் வீரர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement