- Advertisement -
ஐ.பி.எல்

வலைப்பயிற்சியில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர் இவர்தான் – டேவிட் வார்னர் ஓபன் டாக்

கடந்த சில வாரங்களாகவே சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் அந்த அணியில் இடம்பெறாதது பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து அணியை வழிநடத்தியது டேவிட் வார்னர். ஆனால் இந்த ஆண்டு அவருடைய மோசமான செயல்பாடு காரணமாக அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

David warner SRH

அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஜேசன் ராய் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அவருக்கு இனியும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. மேலும் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. மேலும் அவர் இனி சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற மாட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டேவிட் வார்னர் தான் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட போவதில்லை என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவர் வெளியிட்டுள்ள சில கருத்துக்களின் அடிப்படையில் மீண்டும் அவர் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இருப்பினும் ஐ.பி.எல் தொடரில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ள டேவிட் வார்னர் நிச்சயம் இனி வரும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்காக கண்டிப்பாக விளையாடுவார் என்றே தெரிகிறது.

David warner SRH

இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது தான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் குறித்த கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு: தான் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது சந்தித்த கடினமான பவுலர் என்றால் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ரஷித் கான் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் தான் பயிற்சியில் ஈடுபடும் போது வெவ்வேறு பந்துவீச்சாளர்களை அவ்வப்போது சந்திக்கும் நிலை ஏற்படும். ஆனால் ரஷித் கான் சந்திக்கும் போது நிச்சயம் என்னால் அவர் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என்று டேவிட் வார்னர் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by