அந்த விடயத்தை மனதில் வைத்துக்கொண்டே தான் சென்னையை புரட்டி எடுத்தேன் – மிரட்டிய கில்லர் மில்லர் பேச்சு

David Miller 94
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சந்தித்தன. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 169/5 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர் உத்தப்பா 3 (10), மொய்ன் அலி 1 (3) என டாப் வீரர்கள் சொதப்பியதால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த நிலையில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் சரிந்த சென்னையை மீட்டெடுக்க போராடினார்.

Ruturaj gaikwad 73

- Advertisement -

3-வது விக்கெட்டுக்கு 92 பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை காப்பாற்றிய இந்த ஜோடியில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 46 (31) ரன்கள் எடுத்து ராயுடு அவுட்டாக மறுபுறம் முதல் 5 போட்டிகளில் சொதப்பி கடும் விமர்சனத்தை சந்தித்த ருதுராஜ் இம்முறை சிறப்பாக பேட்டிங் செய்து 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உட்பட 73 (48) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் சிவம் துபே 19 (17) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 22* (12) ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

மாஸ் காட்டிய மில்லர்:
அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய குஜராத்க்கு சுப்மன் கில் 0 (1), விஜய் சங்கர் 0 (2) என அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அபினவ் மனோகர் 12 (12) ரிதிமான் சஹா 11 (18) என இதர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தனர். அதனால் 48/4 என தடுமாறியபோது களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் பல வருடங்கள் கழித்து பழைய பன்னீர்செல்வமாக பார்முக்கு திரும்பும் அளவுக்கு அதுவரை சிறப்பாக பந்து வீசிய சென்னை பவுலர்கள் அதன்பின் படுமோசமாக பந்துவீச தொடங்கினார்.

David Miller

இடையில் ராகுல் திவாடியா 6 (14) ரன்களில் அவுட்டானாலும் அதற்காக அஞ்சாத அவர் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து சென்னைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவரை அவுட் செய்ய ஜடேஜாவும் தோனியும் போட்ட திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கிய அவர் சென்னை பவுலர்களை புரட்டி எடுத்து ரன்களை விளாச அவருக்கு துணையாக நின்ற ரஷித் கான் தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டார். குறிப்பாக 17 ஓவர் வரை போட்டி சென்னையின் பக்கம் இருந்த நிலையில் 18-வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டானை சரமாரியாக அடித்த ரசித் கான் 6, 6, 4, 6, 1, 2 என தனியாளாக 20க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி சென்னையின் வெற்றியை சுக்குநூறாக உடைத்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டல் மில்லர்:
மறுபுறம் தொடர்ந்து மாஸ் காட்டிய டேவிட் மில்லர் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உட்பட 94* (51) ரன்கள் விளாசி வெறித்தனமான பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவர்களில் 170/7 ரன்களை எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் பிராவோ (3 விக்கெட்), தீக்சனா (2 விக்கெட்) போன்ற பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கிறிஸ் ஜோர்டான் 3.5 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கியதால் கையிலிருந்த வெற்றி பறிபோனது. இதனால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

David Miller vs CSK

மறுபுறம் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து மாஸ் காட்டுகிறது. இந்த அபார வெற்றிக்கு தனி ஒருவனாக செயல்பட்ட டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். முன்னதாக இந்த போட்டியின் போது கடந்த பல வருடங்களுக்கு முன் பெங்களூருவை வதம் செய்ததை நினைத்து கொண்டே விளையாடியதாக போட்டி முடிந்த பின் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய பிட்னெஸ் விசயத்தில் கடினமாக உழைத்து வருகிறேன். இது அந்தப் பழைய நினைவுக்கு என்னை எடுத்துச் சென்றது (பெங்களூருவுக்கு எதிரான போட்டி). ரன்ரேட் எகிறிக் கொண்டே சென்ற நிலையில் எனக்கு நானே சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்து பந்தை பார்த்து அடி என்ற யுக்தியைக் கையாண்டேன். 16/3 என என்னுடைய அணி தடுமாறிய நிலைமை என்னை சிறப்பாக செயல்பட உதவியது. அதிலும் ரஷித் கான் போன்ற ஒருவர் எனக்கு உதவியதால் பதட்டம் இல்லாமல் பேட்டிங் செய்ய முடிந்தது. என்னைக்கேட்டால் ரஷீத் கான் விளையாடிய அந்தப் ஓவர்தான் போட்டியை மாற்றியது” என பேசினார்.

Miller

அவர் கூறும் அந்த போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். அந்த போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து 51/3 என தடுமாறியது. அந்த நிலையில் 74 பந்துகளில் 140 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய டேவிட் மில்லர் விஸ்வரூபம் எடுத்து வெறும் 38* பந்துகளில் அதிரடி சரவெடியாக சதமடித்து 101* ரன்கள் விளாசி தனி ஒருவனாக வெற்றிபெற வைத்தார்.

இதையும் படிங்க : மும்பை அணி பண்ண ஒரே தப்பு அவரை டீமை விட்டு அனுப்புனதுதான் – ரவி சாஸ்திரி பளீர் பேட்டி

அதன் காரணமாக ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்ற அவர் நீண்ட நாட்கள் கழித்து நேற்றைய போட்டியில் குஜராத் அணிக்காக 170 ரன்கள் துரத்திய போது 16/3 என தடுமாறிய நிலைமையில் 97 பந்துகளில் 154 ரன்கள் தேவை என்ற சமயத்தில் அதேபோல் சரவெடியாக 94* ரன்களை விளாசி பழைய மில்லராக பார்முக்கு திரும்பியுள்ளார்.

Advertisement