செங்கோட்டையில் கொடியா எத்துறீங்க.. எங்களுக்கும் கொஞ்சம் அது இருக்கு சார்.. லக்னோ உரிமையாளரை விளாசிய ஷமி

Mohammed Shami
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா திட்டுவது போல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மே 8ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை ஹைதராபாத் வெறும் 9.4 ஓவரில் சேசிங் செய்தது.

இருப்பினும் அதே போட்டியில் அதே பிட்ச்சில் கேஎல் ராகுல் 29 (33) ரன்கள் அடித்தது லக்னோ தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஹைதராபாத் அடித்து நொறுக்கிய அந்த பிட்ச்சில் நீங்கள் இப்படியா விளையாடுவீர்கள்? என்ற வகையில் கே.எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் கோபத்துடன் பேசினார். அதற்கு சம்பளம் கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஷமி அதிருப்தி:
அத்துடன் எதுவாக இருந்தாலும் மூடிய அறைக்குள் பேசியிருக்கலாமே என்று லக்னோ உரிமையாளரை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் விமர்சித்தார். இந்நிலையில் சம்பளத்துக்காக விளையாடுகிறோம் என்றாலும் எங்களைப் போன்ற வீரர்களுக்கும் கொஞ்சம் சுயமரியாத இருக்கிறது என்று லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோனேகாவை இந்திய வீரர் முகமது ஷமி விளாசியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்களுக்கு மரியாதை இருக்கிறது. அணியின் உரிமையாளரான நீங்களும் மிகவும் மரியாதைக்குரிய நபர். உங்களை பலரும் பார்த்து கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் கேமராவுக்கு முன்பாக இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் அவமானமான ஒன்றாகும். நீங்கள் அதைச் செய்வதற்கு பல வழிகள் இருக்கிறது”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் அதை உடைமாற்றும் அறை அல்லது ஹோட்டல் அறையில் செய்திருக்கலாம். களத்தில் செய்ய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதை செய்வதால் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடியை ஏற்றப் போவதில்லை. அவர் சாதாரண வீரர் கிடையாது உங்களுடைய அணியின் கேப்டன். கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. அங்கே சில நாட்களில் உங்களுடைய திட்டம் தோல்வியடைவது பெரிய விஷயமல்ல”

இதையும் படிங்க: மொதல்ல ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேக்கனும்.. பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம் கரன் வருத்தம்

“இந்த விளையாட்டில் எதுவும் நடக்கலாம். இங்கே நல்ல நாட்களும் மோசமான நாட்களும் இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் மரியாதை இருப்பதால் நீங்கள் பேசுவதற்கு வேறு வழி இருக்கிறது. இது மற்றவர்களுக்கும் மோசமான மெசேஜை கொடுக்கும்” என்று கூறினார். இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கேஎல் ராகுல் விலக உள்ளதாகவும் அடுத்த வருடம் அவரை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க விரும்பவில்லை என்றும் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement