டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு டேவிட் மில்லர் படைத்த நம்பமுடியாத சாதனை – வேறலெவல் தான் சார் நீங்க

David-Miller
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த 33 வயதான இடதுகை அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் தற்போது தனது வாழ்நாளில் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் மில்லர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி டைட்டில் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதேபோன்று ஐபிஎல் தொடரின் போது தனது பேட்டிங்கில் கூடுதல் அதிரடியை காண்பித்த அவர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

IND vs SA VIrat Kohli Rohit Sharma

- Advertisement -

கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 149 ஒருநாள் போட்டிகள் மற்றும் 110 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி உள்ளார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய பவர் ஹிட்டராக பார்க்கப்படும் டேவிட் மில்லர் இந்த ஆண்டு முழுவதுமே தனது உச்சகட்ட பார்மில் இருப்பதினால் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரராகவும், மேட்ச் வின்னராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றினால் அதற்கு பெரிய பங்களிப்பு டேவிட் மில்லரிடம் இருந்து வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அவரது ஆட்டம் பிரமாதமாக உள்ளது.

David Miller 1

குறிப்பாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 12 ஆட்டத்தில் டேவிட் மில்லர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 134 ரன்கள் என்ற இலக்கினை துரத்திய தென்னாப்பிரிக்க அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது.

- Advertisement -

இருப்பினும் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து 46 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 59 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 2022 ஆம் ஆண்டு நம்ப முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 11 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு எதிராக தரமான சம்பவத்தை செய்த தெ.ஆ அணி – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணி சேசிங் செய்யும் போது 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள டேவிட் மில்லர் 14 முறை ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்று விளையாடியுள்ளார். அதில் பல போட்டிகளில் அவர் வெற்றியையும் தேடித்தந்துள்ளார். அதோடு சேசிங் செய்யும் போது அவரது சராசரி 280 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 154-ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement