11 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு எதிராக தரமான சம்பவத்தை செய்த தெ.ஆ அணி – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது லீக் சுற்று முடிவிலேயே வெளியேறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகவே கடந்த ஓராண்டாக ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் மிக தீவிரமாக விளையாடி வருகிறது.

KL Rahul Lungi Nigidi

- Advertisement -

இந்த தொடரில் தாங்கள் பங்கேற்ற முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்த இந்திய அணியானது நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்திய அணி அடுத்ததாக பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையே தலா ஒரு போட்டியில் விளையாட இருப்பதினால் நிச்சயம் அந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். அதே வேளையில் தென்னாப்பிரிக்க அணியும் இன்னும் ஒரு போட்டியில் பெற்றால் கூட அவர்களது அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

Lungi Ngidi

இப்படி குரூப் இரண்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய உள்ள வேளையில் நேற்று நடைபெற்ற இந்த இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தியதே கிடையாது. அப்படி இருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பையில் அவர்கள் 11 ஆண்டுகள் கழித்து இந்திய அணியை வீழ்த்தி சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணியின் தோல்வி. முடிவுக்கு வந்ததா பாகிஸ்தானின் கனவு?

இந்த உலகக் கோப்பை தொடரில் குறைத்து மதிப்பிடப்பட்டு பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணியானது இதுவரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ஒருவேளை அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement