- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் தோல்வி நாயகனா இருப்பது அசாதாரணமானது.. ரெக்கார்ட் பற்றி டேவிட் லாய்ட்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அடுத்தப் போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடிக் கொடுத்தது. ஆனால் 3வது போட்டியில் போராடி இந்தியாவை சாய்த்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது.

அந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்திருக்கும் அவர் 5 போட்டிகளிலும் விளையாடினால் காயத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார்.

- Advertisement -

புள்ளிவிவரப்படி தோல்வி நாயகன்:

அதன் படி முதல் போட்டியில் தோற்ற போதும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்திய அணி ஓய்வு கொடுத்தது. ஆச்சரியப்படும் வகையில் அப்போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வென்றது. அப்போது தான் வியப்பான புள்ளிவிவரமும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. அதாவது 2018க்குப்பின் பும்ராவுடன் விளையாடிய 47 போட்டிகளில் இந்தியா 20 வெற்றி 23 தோல்விகளைச் சந்தித்தது.

ஆனால் பும்ரா இல்லாமல் விளையாடிய 27 போட்டிகளில் இந்தியா 19 வெற்றி, வெறும் 5 தோல்வியை மட்டுமே சந்தித்தது. எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்தன. இந்நிலையில் உண்மையில் ஜஸ்ப்ரித் பும்ரா இப்படி இந்தியாவின் தோல்வி நாயகனாக இருக்கிறார் என்று சொல்லும் புள்ளிவிவரம் அசாதாரணமானது என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார். இது பற்றி டால்க்ஸ்போர்ட் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அசாதாரணமான விவரம்:

“அது அசாதாரணமானது. ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடும் போது இந்தியா அதிகமாக தோற்பதாகவும், அவர் இல்லாத போது அவர்கள் அதிகம் வெல்வதாகவும் கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவர் உலகின் சிறந்த பவுலராக இருந்து வருகிறார். வித்தியாசமான ஆக்சனைக் கொண்டுள்ள அவர் ஒழுக்கமானவர். அவர் 5இல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்”

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா கண்டிப்பா ஆடனும்.. காரணத்தை கூறிய – தீப்தாஸ் குப்தா

“அது உண்மையெனில் பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவார். அப்போட்டியில் இந்தியா வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தால், பும்ரா கடைசிப் போட்டியிலும் விளையாடுவார் என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றால் கடைசிப் போட்டியில் அவர் விளையாட மாட்டார்” என்று கூறினார்.

- Advertisement -