இந்தியாவில் தோனி சிறந்தவரா? எங்களிடமும் சுயநலமற்ற பிளேயர் இருக்காரு.. இங்கிலாந்து வீரரை பாராட்டிய டேவிட் லாய்ட்

David Llyod
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹார்ட்ரிக் தோல்விகளை பதிவு செய்த அந்த அணி 12 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக தேவைப்படும் போது நிதானமாக விளையாட மறுத்த அந்த அணி அதிரடியாகவே விளையாட முயற்சித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்கும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

- Advertisement -

சிறந்த கீப்பர்:
அந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவும் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளார். இருப்பினும் இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் வெறும் 170 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டு வரும் அவரை 101வது போட்டியில் நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் 100வது போட்டியில் விளையாடும் தங்களின் சுயநலமற்ற விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட், தோனி, சங்ககாரா ஆகியோருடன் ஒப்பிட்டு முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் டெய்லி மெயில் இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “அவருடைய 36 என்ற பேட்டிங் சராசரி மற்றும் 59 என்ற ஸ்ட்ரைக் ரேட் என்பது கிட்டத்தட்ட நல்ல விக்கெட் கீப்பர் என்று சொல்வதற்கு ஏற்ற நம்பர்களாகும்”

- Advertisement -

“அவருடைய விக்கெட் கீப்பிங் பற்றி விமர்சிப்பவர்களை நான் கேட்கிறேன் ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய போது ஆஸ்திரேலியாவில் சிறந்த கீப்பராக இருந்தாரா? இந்தியாவில் தோனி சிறந்தவரா? இலங்கையின் சங்ககாரா? எங்களுடைய மாட் பிரயர்? நியூஸிலாந்தின் மெக்கல்லம் ஆகியோர் சிறந்தவர்களாக இருந்தார்களா? இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் விக்கெட் கீப்பராக இருந்ததை விட பேட்ஸ்மேனாக அணிக்கு அதிக மதிப்பை சேர்த்தனர்”

இதையும் படிங்க: தெளிவா இல்லைனா காலி.. அஸ்வின் – நேதன் லயனுக்கு இடையே உள்ள வித்யாசம் பற்றி ரூட் பேட்டி

“அதே போல ஏற்கனவே பேட்ஸ்மேனாக இருந்த ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணிக்காக மிடில் ஆர்டரில் நல்ல விளையாடி விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவர் நல்ல வீரராக வருவார் என்று நான் எப்போதும் சந்தேகப்பட்டதில்லை. ஏனெனில் அந்த வகையான ஸ்டைலை கொண்ட அவர் சுயநலமின்றி விளையாடி போட்டியை மாற்றும் தன்மையைக் கொண்டவர். வேகமான வேகத்தில் ரன்கள் அடித்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவருடைய பெயர் எதிரணியின் வெள்ளைப் பலகையில் இருக்கும் என்று ஒரு சர்வதேச பயிற்சியாளராக நான் உறுதியாக சொல்வேன்” என கூறினார்.

Advertisement