இந்திய அணிக்கு எதிரான எங்களது இந்த மோசமான தோல்விக்கு இதுமட்டும் தான் காரணம் – இலங்கை கேப்டன் புலம்பல்

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் தவானுடன் ஜோடி சேர்ந்த சாம்சன் சிறப்பாக விளையாடி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

sky

- Advertisement -

அதன்பின்னர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 34 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என அமர்க்களப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ரன்களை குவிக்க தவான் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 164 என்ற டீசன்டான ரன் குவிப்பை எட்டியது.

அதன்பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக அசலங்கா 44 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் பந்து வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

bhuvi

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : 164 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் அடிக்கக்கூடிய ஒரு இலக்குதான். பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் எங்களது அணியின் பேட்டிங் இன்று சரிவர அமையாததால் நாங்கள் இந்த போட்டியை இழந்துள்ளோம்.

sl

அசலங்கா மற்றும் பண்டாரா ஆகியோரது விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது போட்டிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த மைதானத்தில் எங்களது பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இனிவரும் போட்டிகளில் எங்களது அணி வீரர்கள் சிறப்பான வெற்றியை எங்களுக்குத் தருவார்கள் என நம்புகிறேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement