டி20 போட்டிகளில் மோசமான சாதனையில் முதலிடத்திற்கு சென்ற இலங்கை வீரர் தசுன் ஷனகா – விவரம் இதோ

Dasun Shanaka
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுக்கான பதினைந்தாவது போட்டியானது செப்டம்பர் 23-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி இருந்தன.

தசுன் ஷனகா நிகழ்த்திய மோசமான சாதனை :

அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 50 ரன்களையும், அசலங்கா 20 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 18 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக முகமது நவாஸ் 38 ரன்களையும், ஹுசைன் தளத் 32 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக விளையாடியிருந்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் ஒரு மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் டக் அவுட்டானதோடு சேர்த்து இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 14 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சௌமியா சர்க்கார் மற்றும் பால் ஸ்டெர்லிங் ஆகியோரை பின்னித்த தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : கடைசி 4-5 மேட்ச்சா இதைத்தான் எதிர்பார்த்தேன்.. டாசுக்கு பிறகு பேசிய கேப்டன் – பிளேயிங் லெவன் இதோ

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் சார்பாக அதிக முறை சர்வதேச டி20 போட்டிகளில் டக் அவுட்டான வீரராக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (12 முறை) தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement