ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இந்த சூப்பர் 4 சுற்று பகுதியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் விளையாடியிருந்த இந்திய அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இதைத்தான் 4-5 மேட்ச்சா எதிர்பார்த்தேன் : சூரியகுமார் யாதவ்
அதனை தொடர்ந்து சூப்பர் ஃபோர் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியானது இன்று வங்கதேச அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டு முடிந்த வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஜேகர் அலி முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதன் காரணமாக தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் தோல்வியை சந்தித்த பிறகு முதலில் பேட்டிங் செய்ய இருப்பது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த போட்டியில் டாசில் தோற்றதில் மகிழ்ச்சிதான். ஏனெனில் கடந்த நான்கு ஐந்து போட்டிகளாகவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். இம்முறை அது நடந்ததில் மகிழ்ச்சி. நாங்கள் இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறோம். அதே வகையிலே இந்த போட்டியையும் அணுக உள்ளோம்.
கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்கள் தான் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள் என இந்திய அணியில் வேற எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சூரியகுமார் யாதவ் உறுதி செய்தார். அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக – அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்ரவர்த்தி.



