இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2025 ஆம் ஆண்டிற்கான 18 சீசனானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
கிளென் பிலிப்ஸ்க்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த குஜராத் டைட்டன்ஸ் :
இதுவரை 33 லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இவ்வேளையில் முதல் நான்கு இடங்களில் டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் உள்ளன, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய அணிகள் பின்தங்கியுள்ளன.
இதன் காரணமாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எவை? என்பது குறித்து ஆவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக இடம் பிடித்திருந்த நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது குஜராத் அணி சார்பாக மாற்று வீரராக அவர் சப்ஸ்டிட்யூட் வீரராக பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான தசுன் ஷனகாவை அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய் கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது அணியில் இணைத்துள்ளது.
இதையும் படிங்க : இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆயிடுங்க.. இல்லனா இதை பண்ணுங்க.. ரோஹித் சர்மாவுக்கு – வீரேந்திர சேவாக் அட்வைஸ்
இதுவரை இலங்கை அணிக்காக 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தசுன் ஷனகா ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணிக்காக ஏற்கனவே ஒரு சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடி 26 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



