மைதானத்திற்குள்ளே கடுமையாக வாய்தகராறில் ஈடுபட்ட பயிற்சியாளர் மற்றும் கேப்டன் – என்ன நடந்தது ?

Arthur
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின் போது ஒரு கட்டத்தில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 11 ஓவர்களில் இந்திய அணி முக்கிய வீரர்களான ப்ரித்வி ஷா, இஷான் கிஷான் மற்றும் தவான் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதன் காரணமாக மீதி உள்ள 40 ஓவர்களை இந்திய அணி சமாளிக்குமா ? என்ற நிலைமை ஏற்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் மற்றும் க்ருனால் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஒரு பார்ட்னர்ஷிப் என அமைத்து இந்திய அணியை இலக்கினை நெருங்க உதவினார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களும் ஆட்டமிழக்க கடைசி 10 ஓவர்களில் 68 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் மட்டுமே களத்தில் இருந்தனர்.

இந்த நேரத்தில் இந்திய அணி எளிதில் விக்கெட்டுகளை இழந்து தோற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அடுத்தடுத்து ரன்கள் சென்றதால் ஓய்வறையில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கடும் விரக்தி அடைந்தார். மேலும் பீல்டிங்கில் வீரர்கள் செய்த தவறையும், தேவையில்லாமல் பந்துகள் பவுண்டரிக்கு செல்வதையும் கண்ட அவர் கடுமையான விரக்தி அடைந்தார்.

arthur 2

அதுமட்டுமின்றி போட்டி இறுதியில் செல்ல செல்ல அவர் முகத்தில் ஏகப்பட்ட சுபாவங்கள் தென்பட்டது, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்நிலையில் கடைசி நேரத்தில் இலங்கை அணி தோற்றபோது கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர் மைதானத்திற்கு நடுவில் வந்து கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அப்போது இருவரும் மிகுந்த கோபத்துடன் பேசிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

arthur 1

பின்னர் மீண்டும் ஓய்வு அறைக்கு திரும்பிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தனது தொப்பியை தூக்கி கீழே எறிந்தார். இந்த செயலைக் கண்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்டு மைதானத்தின் நடுவே இதுபோன்று நடந்து கொள்வது தவறு என்றும் என்ன பேச்சு வார்த்தை வேண்டும் என்றாலும் வீரர்கள் அறையில்தான் பேசிக்கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளித்த ஆர்தர் ” நாங்கள் சண்டையிட்டுக்கொள்ள வில்லை என்றும் அது ஆரோக்கியமான உரையாடல்” என்றும் தெரிவித்தார்.

Advertisement