- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித்துக்கு பதில் இப்போவே கில்லை 2027 உ.கோ கேப்டனாக்குங்க.. கோலி இதை செஞ்சாகனும்.. குல்லினன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 டி20 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற முடிவெடுத்துள்ளனர். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் ஃபிட்டாக நல்ல ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.

எனவே அவர்களை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் கழற்றி விட தேர்வு குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. அத்துடன் சுப்மன் கில் தலைமையில் இப்போதிலிருந்தே புதிய அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையில் களமிறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தனர். ஆனால் அதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா மறுத்து விட்டார்.

- Advertisement -

சுப்மன் கில் கேப்டன்:

இருப்பினும் இதே போல சொல்லி அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிசிசிஐ கழற்றி விட்டது வேறு கதை. இந்நிலையில் தங்களுடைய நாட்டில் நடைபெறும் 2027 உலகக்கோப்பைக்காக இந்தியா இப்போதே சுப்மன் கில்லை கேப்டனாக வளர்க்க வேண்டும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டார்ல் குல்லினன் தெரிவித்துள்ளார். டெஸ்ட், டி20யில் ஓய்வு பெற்று விட்ட விராட், ரோஹித் 2027இல் விளையாட தொடர்ந்து உள்ளூரில் விளையாடி தங்களை ஃபிட்டாக நல்ல ஃபார்மில் வைத்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி 70 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் பேசியது பின்வருமாறு. “திறன் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுந்த களத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் எவ்வளவு சிறந்த நபராக இருந்தாலும் அதிக நேரம் உழைக்காமல் சில போட்டிகளில் விளையாடிவிட்டு அசத்த முடியும் என்று நினைத்தால் அது வேலை செய்யாது”

- Advertisement -

உள்ளூரில் விளையாடனும்:

“அதற்காக நீங்கள் அனைத்து நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகக் கோப்பைக்கு செல்ல விரும்பும் நீங்கள் போதுமான அளவு தீவிரமான கிரிக்கெட்டை விளையாடியிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கு உடல் மற்றும் மனதளவில் தயாராக இருக்க முடியும்”

இதையும் படிங்க: 80க்கு ஆல் அவுட்.. இலங்கை 3 மோசமான அவமான சாதனை.. ராசா தலைமையில் மிரட்டிய ஜிம்பாப்வே

“அதற்கு குறைவாக ஏதேனும் இருந்தால் இந்தியா நகர்ந்து செல்ல வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் அது வேலை செய்யாது. அடுத்த 2 வருடங்கள் அவர்கள் மிகவும் தரமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். குறைவில்லாத கிரிக்கெட்டை அதிகமாக விளையாட வேண்டும். ஆம் ரோஹித் விளையாடுகிறாரா இல்லையா என்பதைத் தாண்டி கில் கேப்டனாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -