வீடியோ : ரசிகரின் கையில் இருந்த பீர் பாட்டிலை பதம்பார்த்த நியூசி வீரர் அடித்த சிக்ஸர் – நீங்களே பாருங்க

Daryl
Advertisement

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் ஜூன் 10-ஆம் தேதி நேற்று துவங்கியது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசி வருகிறது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணியானது இரண்டாம் நாளான இன்று அபாரமாக விளையாடி வருகிறது. இதுவரை 9 விக்கெட்டுகளை இழந்து 550 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியானது தற்போது முன்னிலையில் உள்ளது என்றே கூறலாம். நியூசிலாந்து அணி சார்பாக டேரல் மிட்சல் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டல் ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக 180 ரன்களை கடந்த டேரல் மிட்சல் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியின்போது டேரல் மிட்சல் அடித்த சிக்ஸர் ஒன்று பவுண்டரி லைனில் இருந்த ரசிகர்களின் பியர் பாட்டிலை உடைத்த நிகழ்வு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். அப்போது அந்த பந்து நேராக கூட்டத்திலிருந்த ரசிகை ஒருவரின் பீர் கிளாசில் பட்டு அந்த கிளாஸ் உடைந்து பியர் சிதறியது. போட்டியின் 56-வது ஓவரில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்தியா செய்யவேண்டிய 4 மாற்றங்கள் – விவரம் இதோ

மேலும் ஆட்ட நேர முடிவில் அந்த ரசிகைக்கு வேறு ஒரு பியரை நியூசிலாந்து அணியின் நிர்வாகம் வாங்கி பரிசாக வழங்கி உள்ளது. அதே போன்று அந்த சிக்சரை அடித்த நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement