IND vs RSA : 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்தியா செய்யவேண்டிய 4 மாற்றங்கள் – விவரம் இதோ

IND vs SA
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்கியது. அதில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட ஒருசில மூத்த வீரர்கள் ஒய்வெடுக்கும் நிலையில் ரிஷப் பண்ட் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது. மேலும் சொந்த மண்ணில் எப்போதுமே இந்தியா வலுவான அணி என்ற நிலைமையாலும் சமீபத்தில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 3 டி20 தொடர்களிலும் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்ற காரணத்தாலும் இந்த தொடரில் இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

David Miller SA

- Advertisement -

அதற்கேற்றார் போல் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடி சரவெடியாக 20 ஓவர்களில் 211/4 ரன்கள் குவித்தது. அதனால் வெற்றி உறுதி என்று மகிழ்ச்சியாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு முதல் 10 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 81/3 என்ற நிலைமையால் நம்பிக்கை மேலும் அதிகரித்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் ஜோடி சேர்ந்த டுஷன் – மில்லரை பிரிக்க முடியாமல் தடுமாறிய இந்திய பவுலர்கள் மோசமாக பந்து வீசியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது.

4 மாற்றங்கள்:
அதனால் மொத்தம் கடைசியாக களமிறகிய 12 போட்டிகளிலும் சொந்த மண்ணில் 9 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்கா உங்கள் ஊராக இருந்தாலும் எங்களை குறைத்து மதிப்பிடாமல் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும் என்று சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக வெற்றியை காண வேண்டிய இந்த தொடரில் ஜூன் 12இல் நடைபெறும் 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதற்கு தேவையான 4 மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

Pant

1. பவுலர்கள் பயன்பாடு: முதல் போட்டியில் அனுபவமற்ற இளம் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் முற்றிலும் தவறாக இருந்தது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் 6 ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களை உபயோகப்படுத்தினார். பொதுவாக 2, 3 பவுலர்கள் மட்டுமே அந்த சமயத்தில் பயன்படுத்த வேண்டும். 5 பவுலர்களையும் மொத்தமாக இறக்கினால் முன்கூட்டியே எதிரணியினர் கணித்து விடுவார்கள். எனவே அந்தத் தவறை அவர் மீண்டும் 2-வது போட்டியில் செய்யக்கூடாது.

- Advertisement -

2. சஹால் 4 ஓவர்: அதேபோல் சமீபத்திய ஐபிஎல் தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற சஹால் முதல் 2 ஓவர்களில் ரன்களை வழங்கினார் என்பதற்காக இந்த போட்டியில் இவரின் பவுலிங் அவ்வளவுதான் என்று முடிவெடுத்த பண்ட் வெற்றி பறிபோனபின் கடைசி ஓவரை 3-வது ஓவராக அவரிடம் வழங்கினார்.

miller

ஆனால் சஹால் போன்ற பவுலர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து விக்கெட் எடுக்க கூடிய திறமை பெற்றவர். எடுத்துக்காட்டாக ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் 3 ஓவர்களில் 20+ ரன்கள் எடுத்த அவர் 4-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். எனவே 2-வது போட்டியில் அவரை நம்பி ரிஷப் பண்ட் 4 ஓவர்களை வழங்க வேண்டும்.

- Advertisement -

3. ரவி பிஸ்னோய்: முதல் போட்டியில் குயின்டன் டி காக் விக்கெட்டை எடுத்த போதிலும் 4 ஓவர்களில் 40 ரன்களை வழங்கிய அக்சர் பட்டேல் பேட்டிங் செய்யவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கில் ஒரு குறையும் இல்லை என்பதால் அடுத்த போட்டியில் அவருக்கு பதில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பளிக்கலாம்.

bishnoi

ஏனெனில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அறிமுகமாக அசத்திய அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். மேலும் ஹர்டிக் பாண்டியாவுடன் லோயர் மிடில் ஆர்டரில் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் கணிசமாக பேட்டிங் செய்வார்கள் என்பதால் ஆல்-ரவுண்டராக அக்சர் பட்டேல் நீக்குவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

- Advertisement -

4. உம்ரான் மாலிக்: சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டலாக செயல்பட்ட இவர் முதல் போட்டியிலேயே அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனியர் பவுலர்கள் இருந்ததால் வாய்ப்பு கிடைக்காத இவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய இவரை எதிர்கொள்வதற்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். அதை இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே கேப்டன் தெம்பா பவுமா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : IND vs RSA : இது போதாது, உ.கோ டீம்ல இடம்பிடிக்கணுனா இதை செய்யனும் – இஷான் கிசானுக்கு முன்னாள் வீரர் அறிவுரை

எனவே முதல் போட்டியில் லேசான காயமடைந்த மூத்த வீரர் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளித்து விட்டு ஹைதெராபாத் அணியில் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னிடம் பயிற்சி பெற்ற இவருக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அதனால் இவர் டி20 உலக கோப்பையில் விளையாட தகுதியானவரா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

Advertisement