IND vs RSA : இது போதாது, உ.கோ டீம்ல இடம்பிடிக்கணுனா இதை செய்யனும் – இஷான் கிசானுக்கு முன்னாள் வீரர் அறிவுரை

Ishan Kishan 79
Advertisement

ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியா தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட ஒருசில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா களமிறங்கியுள்ளது. ஜூன் 9-ஆம் தேதி டெல்லியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 211/4 ரன்களை குவித்ததால் எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்துவீச்சில் அதுவும் கடைசி 10 ஓவர்களில் மோசமாக செயல்பட்டதை பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா 212 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND vs SA

அதனால் சொந்த மண்ணில் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்த அந்த அணி 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்று குறைத்து மதிப்பிடாமல் சிறப்பாக செயல்பட்டால் தான் எங்களுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்று காட்டியுள்ளது. அதனால் ஜூன் 12இல் நடைபெறும் இத்தொடரின் 2-வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்வதற்காக இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

பார்முக்கு வந்த இஷான்:
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு ருதுராஜ் – இஷான் கிசான் ஆகியோர் 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் ருதுராஜ் 23 (15) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை 158.33 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து பார்முக்கு திரும்பினார் என்றே கூற வேண்டும்.

ishan kishan 2

ஏனெனில் கடந்த சில வருடங்களில் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் அதன் காரணமாகவே கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார். அதனால் அவரை மீண்டும் வாங்க நினைத்த மும்பை நிர்வாகம் இம்முறை 15.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு போட்டி போட்டு ஏலத்தில் வாங்கியது. அதனால் அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்ததால் சிறப்பாக செயல்பட்டே தீரவேண்டும் என்ற தேவையற்ற அழுத்தம் அவருக்கு ஏற்பட்டது.

- Advertisement -

இது போதாது:
அதனாலேயே முதல் போட்டியில் 81* (48) ரன்களைக் குவித்ததற்குப் பின் பெரும்பாலும் டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாகவும் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் பார்மை இழந்து கடும் விமர்சனத்திற்குள்ளானார். இறுதிவரை 14 போட்டிகளில் 418 ரன்களை வெறும் 120.11 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார். அந்த நிலைமையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இல்லாததால் முதல் போட்டியில் கிடைத்த வாய்ப்பில் 76 ரன்கள் குவித்த அவர் ஓரளவு பார்முக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

Chopra

இருப்பினும் டி20 உலக கோப்பையில் தேர்வாக வேண்டுமெனில் இந்த ரன்கள் போதாது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ரன்களை மலைபோல் குவித்தால் தான் வாய்ப்புள்ளது என்று இஷான் கிஷனுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலக கோப்பை இன்னும் தூரத்தில் உள்ளது என்றாலும் இந்த இன்னிங்ஸ் அவரை (இஷான்) தேர்வு செய்வதற்கு லேசான எண்ணத்தை கொடுத்துள்ளது. என்னை பொருத்தவரை இது நல்ல தொடக்கம். ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. நீங்கள் அங்கே (உலககோப்பைக்கு) செல்ல வேண்டுமெனில் ஒரு மலையைப் போல் ரன்கள் எடுக்க வேண்டும்”

- Advertisement -

“முதல் போட்டியில் அவர் அபாரமாக செயல்பட்டார். பயமின்றி எதிரணியை அட்டாக் செய்தார். பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் சுமாராக தொடங்கினாலும் அதன்பின் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ததை நான் விரும்பினேன். ஆனால் நீண்ட தூரமுள்ள உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன” என்று கூறினார்.

Ishan-3

அதேபோல் ஐபிஎல் தொடரில் சுமாரான பார்மில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை எடுத்த அவர் பழைய பார்முக்கு திரும்ப வேண்டுமெனில் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது பின்வருமாறு. “பெரிய இன்னிங்ஸ் விளையாட நினைக்கும் போது ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்.

இதையும் படிங்க : IND vs RSA : தினேஷ் கார்த்திக் சரிதான் ஆனால் அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம் – கம்பீர் ஆதங்கம்

அந்த வகையில் அவர் அழகாக பேட்டிங் செய்தார். டெல்லியில் விளையாடியதைப் போல் முடிந்தவரை மீண்டும் விளையாட முயற்சியுங்கள். அது எளிதானதாக இருக்காது. ஒருசில தோல்விகள் இருந்தாலும் நல்ல நிலைமைக்கு முன்னேற்றும்” என்று கூறினார்.

Advertisement