IND vs RSA : தினேஷ் கார்த்திக் சரிதான் ஆனால் அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம் – கம்பீர் ஆதங்கம்

Gambhir
- Advertisement -

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 9-ஆம் தேதி டெல்லியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியாவுக்கு சொந்த மண்ணில் அதிர்ச்சி வைத்தியம் அளித்து 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜூன் 12இல் கட்டாக் நகரில் நடைபெறும் 2-வது போட்டியில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்வதற்காக இந்தியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

miller

முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய நிறைய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெங்களூரு அணிக்காக விளையாடிய தமிழகத்தின் சீனியர் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் களமிறங்கிய முதல் போட்டியிலிருந்தே கடைசி நேரத்தில் களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்து எம்எஸ் தோனி போன்றவர்களை காட்டிலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பினிஷராக மிரட்டினார்.

- Advertisement -

டிகே ரிட்டர்ன்ஸ்:
குறிப்பாக அந்த அணியின் விராட் கோலி, கேப்டன் டுப்லஸ்ஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்து தாங்கிப் பிடித்த அவர் குறைந்தது 4, 5 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்திருப்பார் என்றே கூறலாம். இந்தியாவுக்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடியே தீருவேன் என்ற லட்சியத்துடன் எதிரணிகளை பந்தாடிய அவர் மொத்தமாக பங்கேற்ற 16 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 330 ரன்களை விளாசி பெங்களூருவின் கருப்பு குதிரையாக வலம் வந்தார்.

அதிலும் ரசல், லியம் லிவிங்ஸ்டன் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களை காட்டிலும் 183.33 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்த அவர் அதற்காக “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” என்ற ஸ்பெஷல் விருதையும் வென்று அசத்தினார். அப்படி கடினமாக உழைத்த அவருக்கு 3 வருடங்கள் கழித்து தற்போதைய தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

- Advertisement -

தீபக் ஹூடா:
அப்படி பொன்னாக கிடைத்த வாய்ப்பில் முதல் போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய அவருக்கு 2 பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலைமையில் தினேஷ் கார்த்திக் இடத்தில் இதே ஐபிஎல் தொடரில் தாம் ஆலோசகராக இருந்த லக்னோ அணிக்காக மிடில் ஆர்டரில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்ட இளம் வீரர் தீபக் ஹூடா விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Gambhir

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியாடைந்தாலும் அதற்காக 2-வது போட்டியில் பெரிய மாற்றங்களை செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போது நீங்கள் தினேஷ் கார்த்திக் வைத்து விளையாடுகிறார்கள், எனவே அவரை வைத்து தொடரலாம். ஆனால் அந்த இடத்தில் தீபக் ஹூடா இருக்கும் பார்முக்கு அவர் விளையாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் அவர் இளமையான வீரர். இருப்பினும் இதற்காக அடுத்த போட்டியில் மாற்றங்களை செய்ய வேண்டும்என்று எனக்கு தோன்றவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது 36 வயதை கடந்துவிட்ட தினேஷ் கார்த்திக்கை விட இளம் வீரராக இருக்கும் தீபக் ஹூடா இதே ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 451 ரன்களைக் குவித்து நல்ல பார்மில் இருப்பதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் விளையாடி இருக்கலாம் என்று கௌதம் கம்பீர் கூறினார். அத்துடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி களமிறங்கிய தீபக் ஹூடா பலரின் பாராட்டுகளை பெற்றிருந்தார். இருப்பினும் தினேஷ் கார்த்திக்கும் நல்ல வீரர்தான் என்று தெரிவித்த அவர் இதற்காக மாற்றங்களை செய்ய வேண்டியதில்லை என்றும் கூறினார்.

Hooda-2

மேலும் 2-வது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணிக்கு அவர் தெரிவித்த ஒரு சில ஆலோசனைகள் பின்வருமாறு. “பிட்ச் காய்ந்து போய் இருக்கும் பட்சத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை பெஞ்சில் அமர வைத்துவிட்டு ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்புக் கொடுக்கலாம். ஹர்டிக் பாண்டியா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்படலாம்.

இதையும் படிங்க : ஏபிடியை அவுட் செய்வது எளிது, ஆனால் ஜாம்பவானாக வருவார்னு 2008லேயே கணித்தேன் – முன்னாள் பாக் வீரர்

2 மணிகட்டு ஸ்பின்னர்கள் இருப்பது உங்களுக்கு அட்டாக் செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கும். இருப்பினும் மைதானம் சிறியதாக இருந்து சுழல் பந்துவீச்சு எடுபடவில்லை எனில் இதே அணியை வைத்து விளையாடலாம்” என்று கூறினார்.

Advertisement