இப்போதான் சி.எஸ்.கே அணி வாங்கிச்சி.. அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா? – டேரல் மிட்சல் சந்தேகம்

Daryl-Mitchell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது அடுத்த மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த சீசன் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் வேளையில் தற்போது இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது. அதோடு இந்த தொடருக்கான ஆயுத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் புதிதாக வாங்கப்பட்ட நியூசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டான டேரல் மிட்சல் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. துபாயில் நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் 14 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகைக்காக டேரல் மிட்சல் சென்னை அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுவார் என்பதனால் அவரின் திறனை நம்பி சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கடுத்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவரது காயத்தின் தன்மை நிச்சயம் தீவிரமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் அடுத்த மாதம் துவங்க உள்ள ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : பெஞ்சில் உட்கார வேண்டிய உங்களுக்கு இந்த வாய்ப்பே அதிகம்.. இந்திய வீரர் மீது ஆர்பி சிங் அதிருப்தி

ஒருவேளை அவரால் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கான மாற்றுவீரரை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு சிஎஸ்கே அணி தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement