ஐ.பி.எல் தொடரில் எனக்கும் இதேபோன்ற அநீதி நடந்துள்ளது. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட – டேரன் சமி

Sammy
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் ப்ளையாட் என்பவர் அமெரிக்காவில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரை கொடுமைப்படுத்தி காலால் கழுத்தை அறுத்து ஈவுஇரக்கமின்றி கொன்றதாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அமெரிக்காவில் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தது.

america

- Advertisement -

இதற்கு உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த இந்த இனவாத தாக்குதலுக்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்தும் பொது முழக்கமாக எழுப்பப்பட்டது. அதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் அந்த இரக்கமற்ற செயலுக்கு எதிராக தங்களது வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தானும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது இதேபோன்ற இனவாத தாக்குதலுக்கு ஆளானேன் என்ற அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நான் விளையாடிய போது ஒரு போட்டியில் தன்னையும் இலங்கை வீரர் திசாரா பெரேரா ஆகிய இருவரையும் சிலர் மைதானத்தில் “கலு” என்ற வார்த்தையை வைத்து சத்தமாக அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

Sammy 1

கலு என்கிற அந்த வார்த்தைக்கு அர்த்தம் யாதெனில் கருப்பு நிறத்தை சேர்ந்த வலுவான நபர் என்று நினைத்துக் கொண்டதாகவும், பின்னர் அது கருப்பின மக்களை கிண்டல் செய்யும் வார்த்தை என தெரியவந்ததாகவும் சமி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

ஐசிசி மற்றும் மற்றும் மற்ற விளையாட்டு ஆனையங்கள் அனைத்தும் தன்னை போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் அத்துடன் தன்னை போன்றவர்களுக்கு நடக்கும் அநீதியை பற்றி யாரும் பேசுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Sammy 2

அமெரிக்காவில் மட்டும் இனவாதம் இல்லை என்றும் இது தினந்தோறும் உலகம் முழுவதும் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்த அமைதி காக்க வேண்டிய நேரம் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர் விரைவில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement