ஒரு காலத்துல கெத்தா இருந்த வெஸ்ட் இண்டீஸ் இப்போ வெத்தானத்துக்கு காரணம் – டேரன் சமி ஓபன் டாக்

- Advertisement -

ஒருகாலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாட்டில் கோலோச்சி வந்தது. தனி ஒரு அணியாக பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வரலாற்றின் முதல் இரண்டு உலகக் கோப்பையையும் கிளைவ் லாய்ட் தலைமையில் வென்று அசத்தியது. யாரும் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் 1970-80 களில் சிறப்பாக இருந்தது.

Wi

- Advertisement -

கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், காலத்திற்குப் பிறகு பிரைன் லாரா ஆடிய காலத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாகவே இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சாதாரணமான அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி உருமாறியது. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய அணிகளிடம் கூட படு மோசமாக விளையாடி தோல்வியடைகிறது.

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்த அணி சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வாறு நலிவடைய என்ன காரணம் என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

Wi-3

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அந்தந்த காலகட்டத்தில் பாபிலோன், தாம்சன், டென்னிஸ் லில்லி ஆகிய பாஸ்ட் பவுலர்கள் எல்லாம் மிரட்டலாக பந்துவீசினார்கள். அதிவேக பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை பதம் பார்த்திருக்கிறார்கள். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அதே போன்ற பல பாஸ்ட் பவுலர்கள் உருவாகி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

- Advertisement -

அப்போதெல்லாம் பவுன்சர் வீசுவதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது, எந்த விதிமுறையும் கிடையாது. ஆனால் காலப்போக்கில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர்மட்டுமே வீச வேண்டும் என்ற விதிமுறையை அறிவிக்கப்பட்டதில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் குறைய தொடங்கியது. எனது இந்த பார்வை தவறாக இருக்கலாம் ஆனால் அதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணம்.

WI

அப்போதெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகப் பவுன்சர்கள் வீசியே எதிரணியை கட்டுக்குள் வைத்து இருந்தனர். ஆனால் தற்போது ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச முடியும் என்பதால் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்று வித்தியாசமான ஒரு சாக்கு போக்கு காரணத்தை சமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement