தொடர் தோல்வியில் இருந்து மீண்டு நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றியை கொண்டாடி வரும் டெல்லி அணிக்கு மேலும் ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஒருவர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார் .இதனால் அந்த அணியின் நம்பிக்கை மேலும் மங்கியுள்ளது.
நடந்து முடிந்த 7 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் உள்ளது டெல்லி அணி. ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக இருந்த கம்பிர் தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார். பின்னர் அந்த அணியின் புதிய கேப்டிங்க ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.மேலும் அவர் பொறுப்பேற்று ஆடிய முதல் போட்டியில் கம்பிர் சேர்க்கப்பட வில்லை.
கம்பிரின் ராசியோ என்னவோ தெரியவில்லை அவர் ஆடாத அந்த போட்யில் டெல்லிக அணி நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றி பெற்றது. மேலும் புதிய கேப்டன் தலைமையில் அணி வெற்றி பெற்றது என்னை அனைத்து டெல்லி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் .
மேலும் இனி வரும் போட்டிகளிலும் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர் டெல்லி அணி. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளராக கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் . இவர் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும். ஆள் ரௌண்ட் ஆட்டக்காரரான இவர் அணியிகல் இல்லாதது டெல்லி அணிக்கு சற்று பின்னடைவு தான்.
தற்போது இவருக்கு பதிலாக வேறு எந்த வேக பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கலாம் என்று யோசித்து வந்த டெல்லி அணி ,தற்போது தென்னாபிரிக்கா வேக பந்து வீச்சாளரானக ஜூனியர் டாலை அணியில் சேர்த்துள்ளது. இவர் கிறிஸ் மோரில் போன்று சிறப்பாக பந்து வீசுவரா?மேலும் இவரது சேர்க்கை அணியின் பலத்தை அதிகரிக்குமா ?என்ற கேள்விகளுக்கு டெல்லி அணி இனி எதிர் கொள்ள இருக்கும் போட்டிகளில் தான் தெரியும்.