சுயநலமற்ற பண்பை அவங்கள பாத்து கத்துக்கோங்க, பாகிஸ்தானையும் பாபர் அசாமையும் விளாசிய டேனிஷ் கனேரியா

Danish Kaneria Babar Azam
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தையும் தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

IND-vs-NZ

- Advertisement -

இது போல எப்போதுமே சொந்த மண்ணில் வலுவாக செயல்பட்டு வரும் இந்தியா 2022இல் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் அனைத்து எதிரணிகளையும் தோற்கடித்து மிரட்டி வருகிறது. இதை பல இந்திய ரசிகர்கள் துச்சமாகவே பார்க்கிறார்கள். ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 2022இல் சொந்த மண்ணில் கூட எந்த அணிக்கு எதிராகவும் வெற்றிகளை பதிவு செய்ய முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியாவிடம் கத்துக்கோங்க:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அந்த அணி குறைந்தபட்சம் சொந்த மண்ணில் எப்படி தொடர்ந்து வெல்ல வேண்டும் என்பதை இந்தியாவிடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜாவே சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா சமீப காலங்களாகவே சுயநலமாக விளையாடும் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணியை மீண்டும் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

INDvsPAK-1

“நீங்கள் இந்திய அணியை பார்க்கும் போது அதில் மேட்ச் வின்னர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி பாபர் அசாமை மட்டுமே நம்பியுள்ளது. அவர் தொடர்ந்து 50 – 60 ரன்களை அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அதனால் அணிக்கு இது வரை எந்த பயனும் ஏற்படவில்லை என்பதால் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்று வருகிறது. சொல்லப்போனால் பாபர் அசாம் எப்போதும் அணி வெற்றி பெறுவதற்காக ரன்களை அடிப்பதில்லை. அதனால் பாபர் அசாமிடம் இருந்து டி20 கேப்டன்ஷிப் பதவியையும் திரும்ப பெறுவது பற்றி யோசிக்க வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் சமீப காலங்களில் நாம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளோமா? யாராவது இரட்டை சதங்கள் அடித்துள்ளார்களா? எப்போதாவது எதிரணியை அடித்து நொறுக்கும் செயல்பாடுகள் நிகழ்ந்ததா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. மேலும் சொந்த மண் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதை சிறப்பாக பயன்படுத்தி எப்படி அசத்தலாக செயல்பட வேண்டும் என்பதை நாம் இந்தியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாமோ இங்கே சொந்த மண்ணில் எங்கே நமது குறைகள் வெளியே வந்து தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்துடன் உள்ளோம்”

Danish Kaneria INDia

“அத்துடன் தற்போதைய பாகிஸ்தான் அணியில் சோயப் அக்தர் அளவுக்கு எதிரணியை அச்சுறுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் இல்லை. அதே போல் சயீத் அன்வர், அமீர் சோகைல் போன்ற அதிரடியான தொடக்க வீரர்களும் நம்மிடம் இல்லை. ஒரு காலத்தில் முகமது யூசுப், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டரும் இப்போது இல்லை. அதே போல் நமது சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான அப்துல் ரசாக் போன்றவர்கள் இப்போது இல்லை. அது போன்ற வீரர்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் அப்போதெல்லாம் எதிரணிகள் நம்மை கண்டு அஞ்சின”

இதையும் படிங்க:என்னாங்க பெரிய உம்ரான் மாலிக், எங்களோட ஹரிஸ் ரவூஃபை நெருங்க கூட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி கருத்து

“ஆனால் அந்த கதை எப்போதோ மலையேறி விட்டது. தற்போது முதல் 2 போட்டிகளில் இந்தியா அபாரமாக செயல்பட்டு தொடரை கைப்பற்றி விட்டதால் கடைசி போட்டியில் தங்களது பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை சோதிக்க உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியில் உள்ளவர்கள் அனைவரும் எப்போதும் தங்களது இடத்தைப் பற்றி சுயநலமாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement