என்னாங்க பெரிய உம்ரான் மாலிக், எங்களோட ஹரிஸ் ரவூஃபை நெருங்க கூட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி கருத்து

Umran Malik Haris Rauf
- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஆரம்பத்திலேயே 145 கி.மீ வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடித்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை பெற்றார். அதனால் பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்பட்டு முழு வாய்ப்பை பெற்ற அவர் 2022 சீசனில் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக 150 கி.மீ அளவுக்கு தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்திய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை (157 கி.மீ, டெல்லிக்கு எதிராக) வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பாராட்டுகளை அள்ளினார்.

அதனால் இந்தியாவுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட அவர் அதிரடியான வேகத்தில் பந்து வீசினாலும் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களை பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாத அவரை இந்தியா சரியாக பயன்படுத்தத் தவறி விட்டதாக பிரெட் லீ, வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற உம்ரான் மாலிக் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

பினிஷிங் சரில்ல:
இம்முறை நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றி பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களை மட்டுமே கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வரும் அவர் தனது 2வது வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லலாம். குறிப்பாக சமீபத்திய இலங்கைத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக (156 கி.மீ) சாதனை படைத்த அவர் வருங்காலங்களில் இன்னும் சாதனைகளையும் வெற்றிகளையும் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போதைய இந்திய அணியில் அவரை தவிர்த்து யாருமே தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தை கூட தாண்டி வீசுவதில்லை.

rauf

அதனால் கற்றுக் கொடுத்தாலும் கிடைக்காத அதிவேகத்தை கொண்டுள்ள அவரை ஓரிரு போட்டிகளில் சுமாராக செயல்பட்டால் அவசரப்பட்டு கழற்றி விடாமல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 150 கி.மீ வேகத்தில் ஆரம்பிக்கும் உம்ரான் மாலிக் 7, 8 ஓவர்களுக்கு பின் அதே வேகத்துடன் பினிஷிங் செய்யாமல் 138 கி.மீ வேகத்துக்கு குறைந்து விடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் பாகிஸ்தானின் அதிவேக பந்து வீச்சாளராக கருதப்படும் ஹாரிஸ் ரவூப் அருகே கூட உம்ரான் மாலிக் வர முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஹாரீஸ் ரவூப் போல் உம்ரான் மாலிக் நல்ல பயிற்சியும் ஃபிட்டாகவும் இல்லாதவராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை நீங்கள் பார்க்கும் போது அவருடைய முதல் ஸ்பெல் 150 கி.மீ வேகத்தில் இருக்கிறது. ஆனால் 7, 8 ஓவரில் அவரது வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது. இது இந்திய பேட்டிங் துறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்”

Aakib Javed

“மறுபுறம் ஹாரீஸ் ரவூப் அதிவேகமாக வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக செயல்படுவதற்காக உணவு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அவரைப் போன்ற வேறு பாகிஸ்தான் பவுலரை நான் பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையும் யாரும் பின்பற்றுவதில்லை. 160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : 3வது ஒன்டே நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இருப்பினும் டெத் ஓவர்களிலும் ஹாரீஸ் ரவூப் போல 155 கி.மீ வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்களிடம் முரட்டு அடி வாங்கும் நிலை ஏற்படும் என்ற காரணத்தாலேயே கடைசி நேரங்களில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களை பின்பற்றும் உம்ரான் மாலிக் வேகம் குறைகிறது. அத்துடன் போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக வீசுவதற்கு அவர் ஒன்றும் மெஷின் கிடையாது மனிதன் தானே என்று அவரது இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement