இந்திய அணிக்கு அவரோட டேலன்ட் பத்தி தெரிஞ்சும் அவரை வேஸ்ட் பண்றாங்க – டேனிஷ் கனேரியா கருத்து

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேப்பியரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவித்ததால் பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களில் முடிவில் நான்கு விக்கெடுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை பெய்ததன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

அதன் காரணமாக டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளுமே சமநிலையில் இருந்ததால் போட்டி “டை” ஆனது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வரும் வேளையில் இந்திய அணி சஞ்சு சாம்சனின் திறமையை வீணடிக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.

Samson

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது : சஞ்சு சாம்சனின் திறமையை நன்றாக அறிந்தும் அவருக்கு அளிக்காமல் இந்திய அணி அவரது திறமையை வீணடித்து வருகிறது. அவர் சாதாரண ஒரு வீரர் மட்டுமல்ல மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அதோடு ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு அவருக்கு தகுதியும் உள்ளது.

- Advertisement -

நிச்சயம் இந்திய அணி அவர் மீது ஒரு கண் வைத்து எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் அவர் உங்களது அணியின் மிகச் சிறந்த வீரராகவும் உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் சாம்சனை அணியில் இணைத்து விளையாட வையுங்கள் என்று டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பெஞ்சில் இருந்த வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. இறுதிப்போட்டிக்கு பிறகு – பாண்டியா கூறியது என்ன?

ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகள் குவிந்து வரும் வேளையில் தற்போது டேனிஸ் கனேரியாவும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தைக் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement