இப்படி மோசமா விளையாடுனா இந்தியா எப்படி உலககோப்பையை ஜெயிக்கும்? – டேனிஷ் கனேரியா கருத்து

Danish Kaneria INDia
- Advertisement -

இந்திய அணியானது சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்து இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து வீரர்களும் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Zampa

- Advertisement -

ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. கடைசியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு ஐசிசி தொடர்களை இழந்த வேளையில் இந்திய அணி இம்முறையாவது கோப்பையை வெல்லுமா? வெல்லாதா? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த உலக கோப்பையை ஜெயிப்பதற்காக இந்திய அணி இன்னும் தயாராகவில்லை என பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

விராட் கோலி பழைய பார்முக்கு திரும்ப நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் கோலி என்பதால் அணியில் எந்த விதமான மாற்றமும் இல்லை. தற்போதைய சூழலில் சூரியகுமார் யாதவ் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. அதேபோன்று சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி கவலை அளிக்கிறது.

- Advertisement -

பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியிலேயே இல்லை இப்படி பல்வேறு குறைகளை வைத்துக்கொண்டு இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அவர்கள் இன்னும் முழுவதுமாக ஒரு அணியாக தயாராகவில்லை என்பதே எனது கருத்து. இந்தியா தற்போது மோசமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : 2019 உ.கோ தோற்க காரணமான பிரச்சனை மீண்டும் ஸ்டார்ட் ஆகிடுச்சு, அதே தப்ப செஞ்சுடாதீங்க – இந்தியாவை எச்சரிக்கும் ஜாஹீர் கான்

ஆஸ்திரேலிய அணி தற்போது சிறந்த அணியாக திகழ்கிறது. ஏனெனில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டன்ஷிப் பதவிக்கு வந்தது மட்டுமின்றி திறமையாக அணியை வழி நடத்துகிறார். இந்த இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை தவறவிட்டாலும் அவர்கள் ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாராட்டக் கூடியது. நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கத்தை செலுத்தும் என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement