2019 உ.கோ தோற்க காரணமான பிரச்சனை மீண்டும் ஸ்டார்ட் ஆகிடுச்சு, அதே தப்ப செஞ்சுடாதீங்க – இந்தியாவை எச்சரிக்கும் ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்றாலும் கடைசி 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்து ஐசிசி தரவரிசையில் தன்வசம் வைத்திருந்த நம்பர் ஒன் இடத்தையும் தாரை பார்த்தது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா இப்படி மோசமாக தோற்றது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே முக்கிய போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள இந்தியா 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் கடுமையாக விமர்சனங்களை சந்தித்துள்ளது. அந்த நிலையில் 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் எப்படியாவது வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் லட்சியத்துடன் தயாராகி வரும் இந்தியாவுக்கு இந்த தோல்வி ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஜாஹீர் கான் எச்சரிக்கை:
அதை விட கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடருக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார். அதனால் அவர் விளையாடக்கூடிய 4வது இடத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் இத்தொடரில் முழுமையாக வாய்ப்பு பெற்றார். ஆனால் 3 போட்டிகளிலும் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் மோசமான உலக சாதனை படைத்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Rayudu

முன்னதாக 2019 உலகக்கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பல வீரர்களை சோதனை செய்ததில் அம்பத்தி ராயுடு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடுவதற்காக காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்டு முப்பரிமாண வீரர் தேவை என்ற கண்ணோட்டத்தில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

அதில் அவர் சொதப்பி காயமடைந்து வெளியேறிய பின் அந்த இடத்தில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்றவர்களை நாக் அவுட் போட்டிகளின் போது பயன்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் 4 வருடங்கள் கழித்து மீண்டும் உலக கோப்பைக்கு முன்பாக 4வது இடத்தில் விளையாடும் வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜாகிர் கான் அதே தவறை மீண்டும் செய்யாமல் சூரியகுமாரை கழற்றி விட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு சரியான மாற்று வீரரை கண்டுபிடிக்குமாறு இந்திய அணியை எச்சரித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Zaheer

“நீங்கள் பேட்டிங் ஆர்டரை நன்றாக பார்க்க வேண்டும். குறிப்பாக 4வது இடத்தை மீண்டும் பார்க்க வேண்டும். ஏனெனில் 2019 உலகக் கோப்பையின் போது அது மிகப்பெரிய விவாதத்தை எழுப்பிய நிலையில் 4 வருடங்கள் கழித்து மீண்டும் நாம் அதே நிலையில் தான் இருக்கிறோம். அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைக்க நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால் தற்போது காயமடைந்துள்ள அவர் அதிலிருந்து குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் அதற்கு சரியான மாற்று பதிலை கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான். கழுவி ஊற்றும் இந்திய ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

அவர் கூறுவது போல ஸ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று ஏற்கனவே சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் இந்தத் தொடர் மட்டுமல்லாமல் ஆரம்பம் முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் 24.05 என்ற சுமாரான சராசரியில் ஒரு சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு குணமடைந்தாலும் இல்லாவிட்டாலும் 4வது இடத்தில் அசத்தக்கூடிய ஒரு வீரரை விரைவில் உலகக் கோப்பைக்கு முன் இந்தியா கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

Advertisement