அம்பத்தி ராயுடு மாதிரி இவரோட கரியரையும் முடிக்க பாக்குறாங்க – பி.சி.சி.ஐயை விளாசிய டேனிஷ் கனேரியா

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sanju Samson

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் அந்த மூன்று போட்டிகளிலுமே வெளியில் அமர வைக்கப்பட்டார். ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் அந்த போட்டியில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதே வேளையில் அவருக்கு பதிலாக விளையாடிய ரிஷப் பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அவரது இடத்திற்கு சஞ்சு சாம்சனை கொண்டு வர வேண்டும் என்றும் சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தால் அவர் நிச்சயம் பெரிய வீரராக வருவார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

Sanju Samson

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யை தாக்கி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவின் கரியர் இப்படித்தான் முடித்து வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது கரியரே முடிந்து விட்டது.

இதையும் படிங்க : ஜடேஜாவிற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான். அதுல டவுட்டே இல்ல – தமிழக வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

அதேபோன்று தற்போது பிசிசிஐ சஞ்சு சாம்சனை ஒதுக்குவதாக தெரிகிறது. சஞ்சு சாம்சன் இந்த விஷயத்தில் நிறைய சகித்துவிட்டார். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நன்றாக ஸ்கோர் செய்கிறார். ஆனால் ஒரு வீரர் எவ்வளவு தான் சகித்துக் கொள்ள முடியும் என பிசிசிஐ-யை தாக்கி டேனிஷ் கனேரியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement