குழந்தைகள் கூட அவர அடித்து நொறுக்குவாங்க, பணமும் அதிகாரமுமே இந்தியாவின் சரிவுக்கு காரணம் – டேனிஷ் கனேரியா ஆதங்கம்

Danish Kaneria INDia
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேசத்தின் சிறப்பான பந்து வீச்சில் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை விட்ட இந்தியாவுக்கு அதிகபட்சமாக துணை கேப்டன் கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 187 ரன்கள் துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் அட்டகாசமாக செயல்பட்ட இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் வெற்றி உறுதியென்று அசால்டாக செயல்பட்ட இந்திய பவுலர்களை கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்று அற்புதமாக எதிர்கொண்ட மெஹதி ஹசன் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் குவித்து யாருமே எதிர்பாரா வகையில் வெற்றி பெற வைத்தார்.

அதிகாரமும் பணமும்:

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் போராடி வெற்றியைக் கொண்டு வந்த இந்தியா டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் மொத்தமாக சொதப்பி தலை குனியும் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் டெத் ஓவர் பவுலிங் மற்றும் சுமாரான பீல்டிங் என்பதைத் தாண்டி 200 ரன்களை கூட எடுக்காத மோசமான பேட்டிங் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Shakib Al Hasan 1

அதைப் போட்டியின் முடிவில் கேப்டன் ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்ட நிலையில் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் கோடிகளை சம்பாதிக்கும் நட்சத்திர இந்திய வீரர்கள் இப்படி சுமாராக செயல்படுவது வழக்கமாகி வருகிறது. அதே சமயம் அதே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை சம்பாதிக்கும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளிப்பது இயல்பாகி விட்டது. அந்த வகையில் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த சாகிப் அல் ஹசன் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் எப்படி பந்து வீசுவார் என்று தெரிந்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக ரன்கள் குவிக்க பயப்பட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸ் அதிரடியால் தோற்க வேண்டிய இந்தியாவை மழை வந்து காப்பாற்றினாலும் தற்போது அதற்கு வங்கதேசம் பழி வாங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சாகிப் அல் ஹசன் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டார். ஆனால் அவர் கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் பந்து வீசி வருகிறார். அதனால் அவர் எப்படி பந்து வீசுவார் என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தெரியாதா? அவர் எப்போதாவது தான் பந்தை பிரித்து வீசுகிறார்”

Danish-Kaneria-and-Rohit

“பெரும்பாலும் அவருடைய பந்துகள் பிட்ச்சாகி உள்ளே தான் வரும் என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அது தெரியவில்லை. இந்தியாவிடம் அதிக பணமும் அதிகாரமும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதனாலேயே அவர்களுடைய கிரிக்கெட் சரிந்து கொண்டு வருகிறது. அதற்கு இது தான் சாட்சியாகும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸ் அதிரடியில் தோற்க வேண்டிய இந்தியாவை மழை காப்பாற்றியது. ஆனால் அதற்கு சொந்த மண்ணில் வங்கதேசம் தற்போது பழி வாங்கி விட்டது”

“அதை விட இப்போட்டியில் 50 ஓவர்கள் கூட விளையாட முடியாத அளவுக்கு இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. இருப்பினும் இங்கே நிறைய பேர் இந்திய கிரிக்கெட் யாருமே எட்ட முடியாத உச்சங்களை எட்டி விட்டதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் 10 ஓவர்கள் மீதம் இருக்கும் போதே அவுட்டாகி விட்டார்கள். அந்த வகையில் இந்திய பேட்டிங் சீட்டு கட்டு போல சரிந்தது” என்று கூறினார்.

Advertisement