ரோஹித், கோலி குறித்து நீங்க பேசனது ரொம்ப தப்பு. முகமது ஆமீரை விளாசிய – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 29 வயதாகும் ஆமீர் தனது இளமைக் காலத்திலேயே சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி மிகப்பெரிய பெயரை எடுத்தார். அதன் பின்னர் சூதாட்ட பிரச்சனையில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்தார்.

amir

- Advertisement -

அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்து தற்போது பாகிஸ்தான் அணியால் நிராகரிக்கப்பட்டு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அதன் பின்னர் தான் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து சென்று அந்நாட்டு குடிமகனாக மாறி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடப்போகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின்போது இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை என்னால் ரன் அடிக்க விடாமல் பந்துவீச முடியும் என்றும் அவர்களது விக்கெட்டை எப்படி இருக்க வேண்டும் என்ற உத்தி எனக்கு தெரியும் என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் ரோகித் சர்மாவிற்கு இடதுகை பவுலர் வீசும் இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் ரொம்ப தொல்லை கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

Amir

இந்நிலையில் அந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த மற்றொரு முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் : ஏற்கனவே அப்துல் ரசாக் இதேபோன்றுதான் இந்திய பந்து வீச்சாளரான பும்ராவை குழந்தை என்று பேசியிருந்தார். ஆனால் இன்று உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறார். அதே போன்று தற்போது முகமது அமீரும் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களான ரோஹித் மற்றும் கோலியை குறைத்து மதிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Kohli

இன்றைய தேதியில் உலகின் மிகச்சிறந்த இரண்டு வீரர்கள் ரோஹித் மற்றும் கோலி என்பது உலகம் அறிந்தது. அதனால் அவர்கள் இருவரைப் பற்றிய முகமது அமீர் பேசியது தவறு என்று நேரடியாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். மேலும் ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு அது சரிதானா என்பதை பார்த்து பேச வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement