டிராவிட் ஏன் அவரை பிளேயிங் லெவனில் சேக்கல. தோல்விக்கு பின்னர் அணித்தேர்வை விளாசிய – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசியாக நிர்ணயித்த 378 ரன்கள் என்ற இலக்கினை எளிதாக எட்டிப் பிடித்த இங்கிலாந்து அணியானது 3 விக்கெட்டை மட்டுமே இழந்து பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் ஆகியோரது அபார சதம் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் இந்த தொடரையும் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

இந்த போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டம் வரை முன்னிலையில் இருந்த இந்திய அணி நான்காவது நாளில் இருந்து மோசமான சரிவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணி பெற்ற இந்த சரிவு குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி பெற்ற இந்த மோசமான தோல்வி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய அணியின் இந்த நிலைமைக்கு டிராவிட் எடுத்த ஒரு தவறான முடிவுதான் காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறிய கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

Ashwin-Jadeja

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை ஏன் பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. டிராவிட் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது. ஒரு அணியின் பயிற்சியாளராகவும் ஏற்கனவே இங்கிலாந்து மைதானங்களில் அதிகம் விளையாடிய அவர் அந்த தன்மையை புரிந்து கொண்டு அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அஸ்வினை விளையாட வைக்கவில்லை.

- Advertisement -

போட்டியின் மூன்றாம் நாளிற்கு பிறகு பந்து அதிக அளவு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் தான் இருந்தது. நிச்சயம் அஸ்வினை சேர்த்து இருந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அஸ்வினும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சவால் நிறைந்த போட்டிகளை விளையாடியுள்ளார். எனவே அவர் இந்த போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்திய அணியின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்று வெளிப்படையாக தனது கருத்தினை பகிர்ந்து உள்ளார்.

இதையும் படிங்க : இவங்க இப்படி ஆடுனா. எனக்கு என்ன கவலை. என் வேலை ரொம்ப ஈஸி தான் – வெற்றி குறித்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டி

ஏற்கனவே இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்கும் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாததை சுட்டிக்காட்டி ரசிகர்களும் இந்த அணி தேர்வினை விமர்சித்து இருந்த வேளையில் தற்போது இவரும் அதனை சுட்டிக்காட்டி இந்திய அணி செய்த தவறினை பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் அதிக அளவு பேசப்பட்டு வரும் செய்தியாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement