இழந்த தனது பார்மை மீட்டெடுக்க கோலி அந்த மாடல் பேட்டை கையில் எடுக்கனும் – டேனிஷ் கனேரியா கருத்து

Danish-Kaneria-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் வரும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். அதோடு நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் மோசமான ஃபார்ம் காரணமாக மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்த விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கிரிக்கெட் தொடரில் ஓய்வு என்கிற பெயரில் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார்.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்த வேளையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இப்படியே கூறிவரும் வேளையில் விராட் கோலி இழந்த தனது பார்மை எவ்வாறு எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியாவும் விராட் கோலி இழந்த பார்மை மீட்டெடுக்க சில கருத்துக்களை கூறியுள்ளார்.

Kohli

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெற வேண்டுமெனில் ஆசிய கோப்பை தொடரில் அவர் மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்க வேண்டியது அவசியம். அவருடைய வருகை மிகச்சிறப்பாக இருந்தால் மட்டுமே அவரது இடம் பரிசீலிக்கப்படும்.

- Advertisement -

அந்த வகையில் அவர் ரன்களை குவிக்க வேண்டுமெனில் கொக்கி போன்ற பேட்டையோ அல்லது வளைவு போன்ற பேட்டையோ பயன்படுத்தினால் மட்டுமே அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும். அதோடு அவர் மீது இருக்கும் விமர்சனங்களை உதறிவிட்டு கோலி மீண்டும் ஃபார்மிற்கு வர இந்த இரு வகையான பேட்களை பயன்படுத்தினால் மட்டுமே அவரால் இழந்த பார்மை மீட்டெடுக்க முடியும்.

இதையும் படிங்க : சஞ்சய் மஞ்சரேக்கரை தொடர்ந்து ஜடேஜாவை சீண்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட – முன்னாள் வீரர்

கோலி ஒருமுறை ஃபார்ம்-க்கு வந்து விட்டால் நிச்சயம் அவரை கட்டுப்படுத்துவது என்பது எதிர் அணிகளுக்கு கடினம். அதன் பிறகு அவர் அபாயகரமான வீரராக மீண்டும் மாறிவிடுவார் என டேனிஷ் கனேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement