பாகிஸ்தான்ல தான் அப்படினா இந்தியாவுல அதுக்கு மேல அரசியல் – சஞ்சு சாம்சன் பற்றி டேனிஷ் கனேரியா வேதனை

- Advertisement -

நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவில் சந்தித்த டி20 உலக கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா வெற்றி பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சுமாராக செயல்பட்ட சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளது. அதற்கேற்றார் போல் இந்த டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு கோப்பையையும் இந்தியா வென்றுள்ளது.

Ishan Kishan and Pant

- Advertisement -

ஆனால் இந்த வெற்றியில் பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் சூரியகுமார் யாதவ் அதிரடியான சதத்தால் கோப்பையை வென்ற இந்திய அணி இஷான் கிசான், ரிஷப் பண்ட் போன்ற சொதப்பல் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்பளித்ததே தவிர சஞ்சு சாம்சன் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. குறிப்பாக அறிமுகமான 2017 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினாலும் டி20 கிரிக்கெட்டில் இப்போது வரை 64 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் ஒருமுறை கூட ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

பரிதாப சாம்சன்:

இந்த தொடரில் ஓப்பனிங் வாய்ப்பை பெற்ற அவர் 1 முதல் 7 வரை அனைத்து இடங்களில் சொதப்பியும் தொடர்ந்து இந்திய நிர்வாகம் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருகிறது. அதே போல் ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுவார் என்று தெரிந்தும் ஷ்ரேயஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டதில் அதில் அவரும் சொதப்பினார். மறுபுறம் ரிஷப் பண்ட்டை விட சமீப காலங்களில் அதிரடியாகவும் அதிகமாகவும் ரன்களை சேர்த்து ஷ்ரேயஸ் ஐயரை விட ஷார்ட் பிட்ச்களை சிக்ஸர்களாக பறக்க விடும் திறமை கொண்ட சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

Sanju-Samson

அத்துடன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட பாண்டியா தலைமையிலும் அதே பழைய கதை அரங்கேறியது கிரிக்கெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. இதனால் இந்திய அணியில் மேல் மட்ட வீரர்களுக்கு தொடர் வாய்ப்பு கொடுக்கப்படுவதும் கீழ் மட்ட வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்படும் அரசியல் நடந்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தானில் தான் இது போன்ற விருப்பு வெறுப்பு அடிப்படையில் தேர்வு நடக்கிறது என்றால் இந்தியாவிலும் அதே கதை தான் நடக்கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பண்ட் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்தியும் அவர் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு ஆதரவாக சில போராட்டங்களையும் ரசிகர்கள் செய்தனர். சஞ்சு சாம்சன் சிறந்த வீரர் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அவருடைய நுணுக்கங்கள் சிறப்பாக உள்ளது”

Kaneria

“பாகிஸ்தானில் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தேர்வுகள் நடப்பதை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்தியாவிலும் அதே தான் நடக்கிறது. இந்தியாவிலும் விருப்பு வெறுப்பு அடிப்படையில் அணி தேர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு அநீதி நடந்து வருகிறது. ரிஷப் பண்ட்டுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் டி20 கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் எந்த கேப்டன்கள் வந்தாலும் ரிசப் பண்ட் தரமான வீரர் ஒற்றைய ஆளாக போட்டியை மாற்றக் கூடியவர் என்று நினைத்துக் கொண்டு வாய்ப்பு கொடுக்கிறார்கள். அவருக்கு அனைத்து இடங்களிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் எதுவுமே வேலைக்காகவில்லை”

“இது பற்றி பாண்டியாவிடம் கேட்டபோது அவர் கேள்விக்கு தகுந்த பதிலை கொடுக்கவில்லை. ஆனால் இங்கு விஷயம் என்னவெனில் இப்படியே அலைக்கழிக்கப்பட்டால் சஞ்சு சாம்சன் அதே பார்மில் இருப்பாரா? ஏனெனில் டி20 உலகக் கோப்பையில் கழற்றி விட்டப்பட்ட அவர் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement