இந்திய டி20 அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு பொருத்தமான பேட்டிங் பொசிஷன் இதுதான் – டேனியல் வெட்டோரி

Vettori
- Advertisement -

இந்திய அணியில் இருந்து சமீபகாலமாகவே ஒதுங்கியிருந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் வரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்றும், தான் பவுலிங்கில் கவனம் செலுத்தி முழு பிட்னஸ் அடைந்த பின்னர் இந்திய அணிக்கு திரும்புவேன் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து விதத்திலும் அசத்தியதோடு குஜராத் அணியின் கேப்டனாக தலைமைதாங்கி முதல்முறையாக அறிமுக சீசனில் கோப்பையை கைப்பற்றி கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

Pandya

- Advertisement -

குஜராத் அணி பெற்ற வெற்றியில் பாண்டியாவின் பங்கு மிக அதிகம் என்பதனால் அவரை பாராட்டி பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி ஹார்டிக் பாண்டியாவின் கம்பேக் குறித்தும், இந்திய அணியில் அவர் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் வழக்கமாக ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் பாண்டியா இறங்கி விளையாடுவார். ஆனால் என்னை பொறுத்தவரை அவரை இந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட வைத்தால் அது அவருக்கு சரியான பொசிஷனாக அமையும். ஏனெனில் அவரால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாட முடிகிறது.

Hardik Pandya GT Vs RR

அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது எந்த நேரத்திலும் ரன் ரேட்டை வேகப்படுத்த முடியும் எனவே அவரை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என்று கூறுகிறேன். சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பலமாக இருக்கும். அதனால் பாண்டியாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா டாப் ஆர்டரில் முன்கூட்டியே வந்து விளையாடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் பேட்டிங்கில் 487 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதோடு பந்து வீச்சிலும் 8 விக்கெட் வீழ்த்தி மீண்டும் தனது கம்பேக்கை உலகிற்கு உரக்கச் சொல்லி உள்ளார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இதையும் படிங்க : கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவன் – ரசிகர்கள் கிண்டல்

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஜூன் 9ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்துள்ள பாண்டியா நிச்சயம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பை தொடருக்கான தனது இடத்தை இந்த தொடரிலேயே உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement