இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4 அணிகள் இவைதான் – டேனியல் வெட்டோரி கணிப்பு

Vettori
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது கிட்டத்தட்ட பாதி போட்டிகளை கடந்து இரண்டாம் கட்ட போட்டிகளில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. மொத்தம் 10 அணிகளுடன் நடைபெற்று வரும் இந்த தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெறும் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் கிட்டத்தட்ட வாய்ப்பை இழந்த நிலையில் மற்ற எட்டு அணிகளுக்கும் இடையே தற்போது பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

miller

இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி எந்தவித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் முன்னேறி விடும் என்றும் மீதமுள்ள 3 இடங்களுக்கு மற்ற அணிகள் அனைத்தும் போட்டி போடும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது இத்தொடரானது மேலும் சுவாரசியமான கட்டத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் எது என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேனியல் வெட்டோரி தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் என்னை பொறுத்தவரை நிச்சயமாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

அந்த இரு அணிகளையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதே போன்று மீதமுள்ள இரண்டு இடத்திற்கு மற்ற அணிகள் அனைத்தும் கடுமையான போட்டி அளிக்கும். ஆனாலும் என்னை பொறுத்தவரை பெங்களூர் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் குறிப்பிட்ட நான்கு அணிகளாவது : (குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர்.) கடந்த ஆண்டு வரை 8 அணிகளுடன் நடைபெற்று வந்த இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெற்ற பெரிய வரவேற்பு காரணமாக இந்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஊதா தொப்பியை அவர்தான் வாங்கணும் – பாசமழை பொழிந்த குல்தீப் யாதவ்

அந்த வகையில் புதிதாக இணைந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் எவ்வாறு விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது இந்த இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement