- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்திய அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மோதப்போகும் அணி இதுதான் – டேனியல் கிறிஸ்டியன் கருத்து

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வரும் வேளையில் குரூப் ஏ பிரிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

இந்திய அணியுடன் இருதிப்போட்டியில் விளையாடப்போகும் அணி இதுதான் : டேனியல் கிறிஸ்டியன்

அதனை தொடர்ந்து குரூப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எது? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணிகள் எது? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான டேனியல் கிரிஸ்டல் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடப்போகும் அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணி தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. ஆனாலும் ஐசிசி தொடரின் போது எப்போதுமே ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் எங்களது அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் இங்கிலீஷ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து பிரமாதமாக விளையாடியிருந்தார்கள். அந்த வகையில் இனிவரும் போட்டிகளிலும் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இல்லாமலும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை காப்பாற்றப்போவது யார்? : யோக்ராஜ் சிங் கேள்வி

தற்போதைக்கு ஆஸ்திரேலியா விளையாடி வரும் ஆட்டத்தை பார்க்கும்போது நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -