இந்திய ரசிகர்கள் 2006ல கழுதைக்கு என் பேர வச்சாங்க.. அதுக்கு காரணம் இது தான்.. பின்னணி பகிர்ந்த மார்ட்டின்

Damien Martin
Advertisement

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்கு சரிந்த அந்த அணி அதற்காக துவளாமல் கொதித்தெழுது அடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று தற்போது டாப் 4 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

இதனால் 1987இல் தங்களது முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய மண்ணில் இம்முறை 6வது முறையாக ஆஸ்திரேலியா சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்றதை மறக்க முடியாது.

- Advertisement -

கழுதைக்கு பெயர்:
அதை விட ஃபைனலில் வெற்றிக் கோப்பையை பரிசாக கொடுத்து விட்டு உடனடியாக விலகாமல் சற்று அங்கேயே நின்ற அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவாரை கொண்டாட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதி ரிக்கி பாண்டிங், டெமின் மார்ட்டின் ஆஸ்திரேலிய வீரர்கள் தள்ளி விட்டதும் சர்ச்சையானது. இந்நிலையில் அப்படி பிசிசிஐ தலைவரை தள்ளிவிட்டதற்காக அடுத்த நாள் இந்திய ரசிகர்கள் கழுதைக்கு தம்முடைய பெயரை சூட்டி எதிர்ப்பு தெரிவித்ததை ஆஸ்திரேலிய வீரர் டேமின் மார்டின் நினைவு கூர்ந்துள்ளார்.

இது பற்றி யூடியூப் பக்கத்தில் முதலில் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு. “மும்பையில் நடைபெற்ற 2006 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின் இது நடந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் கோப்பையை வென்ற போது கொண்டாட்டங்கள் துவங்கின. ஆனால் அப்போது ஒரு வயதான பிசிசிஐ தலைவர் அங்கிருந்து செல்லாமல் நாங்கள் போட்டோ எடுக்கும் போது நின்று கொண்டிருந்தார். அப்போது அதை நீங்கள் கையாண்டீர்கள் மார்ட்டின்” என்று கூறினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து மார்ட்டின் பேசியது பின்வருமாறு. “நான் அவரை கொஞ்சம் தள்ளினேன். நாங்கள் எங்கள் புகைப்படத்திற்கு முன்னால் வந்து கொண்டிருந்தோம். பிராட் ஹாக் அவரிடம் பணிவுடன் கேட்டார். ரிக்கி பாண்டிங் எதுவும் சொல்லவில்லை அதனால் நான் அவருக்கு ஆஸ்திரேலிய ஸ்லெட்ஜ் கொடுத்தேன். அதன் பின் நான் உடைமாற்றும் அறைக்கு வந்த போது அணி மேலாளர் என்னை ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசச்சொன்னார்”

இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி நாங்க இந்தியாவுக்கு யாருன்னு காட்டிட்டோம்.. எச்சரிக்கையுடன் டுஷன் பேட்டி

“அதனால் நானும் கடிதம் எழுத வேண்டியிருந்தது. அடுத்த நாள் இந்திய ரசிகர்கள் என் பெயரைக் கொண்ட கழுதையின் மீது எழுதி எதிர்ப்பு தெரிவித்தார்கள். அன்று அந்த கழுதை பிழைத்ததா என்று தெரியவில்லை. மொத்தத்தில் அது என் கேரியரில் சிறப்பம்சங்களில் ஒன்று போல இருந்தது” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

Advertisement