விராட் கோலிக்கு அப்புறம் பெங்களூரு அணியின் கேப்டனாக இவர் இருந்தால் கரெக்ட்டா இருக்கும் – டேல் ஸ்டெயின்

Steyn
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான அணியாக ஒவ்வொரு ஆண்டும் பார்க்கப்படும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகை அல்ல. பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் பெங்களூர் அணிக்காக ஒன்றாக விளையாடி இருந்தாலும் இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாத ஒரு அணியாக பெங்களூரு அணி இருந்துவருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே கோலி ஒரு முறையாவது பெங்களூர் அணிக்காக கோப்பையை கைப்பற்றி கொடுப்பார் என்று பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு இது வரை அந்த கனவு நிறைவேறவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த 14வது ஐபிஎல் தொடருக்கு பின்னர் தான் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு எந்த வீரர் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட போகிறார் ? என்பதில் பெரிய அளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை அறிவித்து வரும் வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், பெங்களூர் அணிக்காக விளையாடிய வருமான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

RCB

இதுகுறித்து அவர் கூறுகையில் : பெங்களூரு அணிக்கு கேப்டனாக செயல்பட கேஎல் ராகுல் தகுதியானவராக இருப்பார் என்று நான் கருதுகிறேன். அடுத்த ஆண்டு பெங்களூர் அணி ஒருவேளை டிரேடிங் முறையில் ராகுலை கைப்பற்றினால் நிச்சயம் அவர் பெங்களூர் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

- Advertisement -

rahul

ஏனெனில் ராகுல் இளம் வீரர் என்பதால் அவரால் நீண்ட காலத்திற்கு பெங்களூர் அணிக்காக கேப்டன்சி செய்ய முடியும். ஏற்கனவே பெங்களூரு அணியில் விளையாடி உள்ள ராகுல் தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேசிய ஸ்டெயின் கூறுகையில் :

இதையும் படிங்க : கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்ற இஷான் கிஷன். தோளில் தட்டி தேற்றிய விராட் கோலி – என்ன நடந்தது ?

ஏபி டிவிலியர்ஸ் ஒரு நல்ல வீரர்தான். ஆனால் அவருடைய கிரிக்கெட் கெரியாரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவரால் எத்தனை காலம் பெங்களூர் அணிக்கு தலைமை தாங்க முடியும் என்று தெரியாது. எனவே தான் இளம் வீரரான ராகுல் இந்த பதவிக்கு சரியாக இருப்பார் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement