அக்சர் படேல் இம்முறை நிறைய ஓவர்கள் இதற்காகவே வீசியாக வேண்டும் – டேல் ஸ்டெயின் கருத்து

Dale Steyn and Axar
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முதல் பாதியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இரண்டாம் பாதியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிளேஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்கும் முனைப்பில் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தயாராகி வருகிறது.

அக்சர் படேல் நிறைய ஓவர்களை வீசனும் : டேல் ஸ்டெயின்

அந்த வகையில் இன்று லக்னோ நகரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சிறப்பாக துவங்க வேண்டும் என்ற முனைப்புடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கேப்டன் அக்சர் பட்டேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவிலான ஓவர்களை வீசிய அக்சர் பட்டேல் இம்முறை நிறைய ஓவர்களை வீச வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை அக்சர் பட்டேல் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் மீட்டிங்கில் அமர்ந்து இம்முறை சரியான திட்டத்துடன் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை நம்பர் ஒன் வீரராக இருக்கும் அக்சர் பட்டேல் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே இம்முறை அவர் நிறைய ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அக்சர் பட்டேல் அந்த அணிக்கு கேப்டனாகவும் இருப்பதினால் எங்கு வேண்டுமானாலும் அவரால் வந்து பந்துவீச முடியும். எனவே சுயநலமாக சில முடிவுகளை எடுத்து தானாக முன்வந்து பந்து வீசவேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி முதல் போட்டியில் தோற்க இதுவே காரணம்.. இனி மாத்திக்கனும் – மைக்கல் ஹசி பேட்டி

அதேபோன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது மிட்சல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய இரண்டு வலது கை ஆட்டக்காரர்கள் துவக்க வீரர்களாக இருப்பதால் அவர் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசினாலும் அது சாதகமாக இருக்கும். ஏனெனில் மிடில் ஓவர்களின் போது அவர்களிடம் குல்தீப் யாதவ் இருக்கும் பட்சத்தில் அக்சர் பட்டேல் தானாக முன்வந்து பவர்பிளேவில் பந்து வீசலாம் என்றும் டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement