- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023இல் ஷமி வேணும்ன்னு பிச்சை கேட்டேன்.. இப்போ இந்தியா மாதிரி அவங்களும் கழற்றி விட்டாங்க.. டேல் ஸ்டைன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அந்தத் தொடரிலும் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கழற்றி விடப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.

அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலியா தொடர் வரை விளையாட முடியவில்லை. இறுதியில் ஒரு வழியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய ஷமி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து தற்போது வரை அவர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டு வருகிறது.

- Advertisement -

இந்தியா போல ஹைதராபாத்:

இத்தனைக்கும் 2025/26 ரஞ்சிக் கோப்பையில் முதல் 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்த ஷமி பெங்கால் அணி அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற முக்கிய பங்காற்றினார். அதனால் தம்முடைய ஃபிட்னஸை நிரூபித்த அவருக்கு தென்னாபிரிக்க தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டுள்ளது.

அதன் காரணமாக ஷமியின் இந்திய கேரியர் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஷமியை எப்படியாவது வாங்குமாறு கேட்டுக்கொண்டதாக ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வயது மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றில் பின்தங்கியுள்ள அவரை இந்தியாவைப் போல ஹைதராபாத் அணியும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன் லக்னோவிடம் ட்ரேடிங் முறையில் கழற்றி விட்டுள்ளதாக ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஷமியை கழற்றி விடும்:

இது பற்றி ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த போது, ப்ளீஸ் எப்படியாவது நம்மால் ஷமியை வாங்க முடியுமா? என்று நிர்வாகத்திடம் கேட்டேன். கடைசியில் அவர்கள் நான் பயிற்சியாளராக இல்லாத போது ஷமியை வாங்கினார்கள். 2026 சீசனில் அவரை ஹைதராபாத் அணி இழந்தால் நான் ஏமாற்றமடைவேன். ஐபிஎல் என்று வரும் போது பவுலர்கள் நல்ல ஃபார்மில் ஃபிட்டாக இருப்பது முக்கியம்”

இதையும் படிங்க: 57/0 டூ 159க்கு அவுட்.. வாசிம் அக்ரமை முந்தி பும்ரா வரலாற்று சாதனை.. அரை நாளில் தெ.ஆ’வை சுருட்டிய இந்தியா

“ஃபிட்டாக இருக்கும் பவுலர்களையே நீங்கள் நெருப்பாக விளையாடுவதை விரும்புவீர்கள். ஒருவேளை ஷமி ஃபிட்டாக நெருப்பாக இருந்தால் எந்த அணிக்காக வேண்டுமானாலும் விளையாடுவார். ஆனால் நீங்கள் சில மாதங்கள் விளையாடாமல் தடுமாற்றமாக இருந்தால், மற்ற பவுலர்கள் அணிக்குள் வந்து விட்டார்கள் என்று உங்களிடம் சொல்வார்கள். நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன் நல்ல வீரராக இருந்ததைப் போல இப்போது இல்லை. எனவே ஷமியை அவர்கள் (ஹைதராபாத்) கழற்றி விடுவது நடக்கலாம். ஆனால் ஆம் 3 வருடத்திற்கு முன் எப்படியாவது ஷமி வேண்டும் என்று நான் பிச்சை கேட்டேன்” எனக் கூறினார்.

- Advertisement -