57/0 டூ 159க்கு அவுட்.. அரை நாளில் தெ.ஆ’வை சுருட்டிய இந்தியா.. வாசிம் அக்ரமை முந்தி பும்ரா வரலாற்று சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அப்போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொண்டது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரியன் ரிக்கல்டனை 23 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த ஐடம் மார்கரைமையும் அவர் 31 ரன்னில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

சாம்பியனை அரை நாளில் சுருட்டிய இந்தியா:

அடுத்து வந்த கேப்டன் தெம்பா பவுமாவை 3 ரன்னில் காலி செய்த குல்தீப் யாதவ் எதிர்ப்புறம் நங்கூரத்தைப் போட முயற்சித்த வியான் முல்தரை 24 ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார். மிடில் ஆர்டரில் மெதுவாக விளையாட முயற்சித்த டோனி டீ ஜோர்சி 24 ரன்னில் பும்ரா வேகத்தில் நடையைக் கட்டினார். அதே போல கெய்ல் வேர்ரின் 16, மார்கோ யான்சென் 0 ரன்களில் அடுத்தடுத்து முகமது சிராஜ் வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் தென்னாப்பிரிக்கா வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்பரி உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாப்பிரிக்காவை அரை நாளில் சுருட்டி வீசிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அவருடன் முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 2, அக்சர் பட்டேல் 1 விக்கெட் எடுத்து கை கொடுத்தார்கள்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா வரலாற்றுச் சாதனை:

இதையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா நாடுகளுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா 13வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளுக்கு எதிராக அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் நாளே தென்னாப்பிரிக்காவை முடித்து விட்ட பும்ரா.. இந்திய வீரராக அசத்தல் சாதனை – விவரம் இதோ

அந்தப் பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா): 13 முறை
2. வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்): 12 முறை
3. கபில் தேவ் (இந்தியா): 11 முறை
4. வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்): 9 முறை
5. சோயப் அக்தர் (பாகிஸ்தான்)/ இம்ரான் கான் (பாகிஸ்தான்)/ ஜஹீர் கான் (இந்தியா): தலா 8 முறை

Advertisement