ஸ்லோவாக போடச் சொன்ன என்னை 155 கி.மீ பந்தால் தவறாக்கிய உம்ரான்.. முன்னேற இதை செய்யனும்.. டேல் ஸ்டைன்

Dale Steyn
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரிலிருந்து கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட உம்ரான் மாலிக் காயத்தால் விலகியுள்ளார். 2022 சீசனில் ஹைதராபாத் அணிக்காக தெறிக்க விடும் வேகத்தில் பவுலிங் செய்த அவர் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.

ஆனால் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் வேகத்தை மட்டுமே நம்பி பவுலிங் செய்த அவர் அவ்வப்போது ரன்களை வாரி வழங்கினார். அதே போல இந்திய அணிக்காகவும் லைன், லென்த் ஆகியவற்றைப் பின்பற்றி பவுலிங் செய்யாததால் ரன்களை வாரி வழங்கிய அவர் கழற்றி விடப்பட்டார். இந்நிலையில் உம்ரான் மாலிக்கிடம் உண்மையாகவே வேகமாக பௌலிங் செய்யும் திறமை இருப்பதாக ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திறமையான உம்ரான்:

அதே சமயம் உம்ரான் மாலிக் மீண்டும் அசத்துவதற்கு எப்போதுமே வேகமாக அல்லாமல் போட்டித் திட்டத்தை பின்பற்றி பௌலிங் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “இது கொஞ்சம் வேடிக்கையான கதை. ஏனெனில் அவரிடம் மெதுவாக வீசுமாறு நான் சொன்னேன். அது சிறந்த ஆலோசனை என்று உம்ரான் மாலிக் ஏற்றுக்கொண்டார்”

“புவனேஸ்வர் குமாரால் முடிந்தால் நானும் அதை முயற்சிக்கிறேன் என்று அவர் சொன்னார். அடுத்ததாக மும்பையில் நடைபெற்ற ஒரு போட்டியில் உம்ரான் மெதுவான பந்தை வீசுவதற்கு சரியானச் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது எனது அருகில் அமர்ந்திருந்த முத்தையா முரளிதரனிடம் (துணைப் பயிற்சியாளர்) அவர் மெதுவான யார்க்கர் பந்தை வீசப் போகிறார் பாருங்கள் என்று சொன்னேன்”

- Advertisement -

ஸ்டைன் அட்வைஸ்:

“ஆனால் மிகவும் வேகமாக ஓடி வந்த உம்ரான் யார்கர் பந்தால் ஸ்டம்ப்களை பறக்க விட்டார். உடனே கேமரா முரளி மற்றும் என் பக்கம் திரும்பியது. அதாவது உம்ரான் அப்படி வீசியதற்கு நாங்கள் தான் காரணம் என்ற வகையில் கேமராமேன் காண்பித்தார். உண்மையில் அவரிடம் மெதுவான பந்தை தான் வீசச் சொன்னேன். ஆனால் அவர் 155 கி.மீ வீசி ஸ்டம்ப்களை தெறிக்க விட்டார்”

இதையும் படிங்க: கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற சி.எஸ்.கே.. முன்வந்து ஆதரவு கொடுத்த ஐ.பி.எல் அணி – ஷர்துல் தாகூருக்கு அடிச்ச ஜாக்பாட்

“சில நேரங்களில் புள்ளிவிவரங்கள் முக்கியமல்ல. அன்று உம்ரான் மாலிக் என்னைத் தவறு என்று நிரூபித்தார். வேகமே என்னுடைய திறன். அதை நான் செய்கிறேன் என்ற வகையில் அவர் செயல்பட்டார். அதே சமயம் ஐபிஎல் போன்ற தொடரில் 60000 ரசிகர்கள் கூச்சலிடம் சூழ்நிலையில் 160 கி.மீ வேகப் பந்தை வீசுவது சிறந்தது. ஆனால் அது போட்டித் திட்டத்திற்கு எதிராக இருந்தால் நீங்கள் 60 – 70 ரன்களை வழங்குவீர்கள். அது எந்த அணிக்கும் உகந்ததாக இருக்காது” என்று கூறினார்.

Advertisement