டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து டி20 போட்டிகளிலும் சாதனை படைத்த டேல் ஸ்டெயின் – விவரம் இதோ

Steyn

ஒரு காலத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்தவர் டேல் ஸ்டெயின். ஆனால் காயம் காரணமாக அவரால் தற்போது சரிவர பந்துவீச்சில் செயல்பட முடியவில்லை. இருந்தாலும் 439 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்காவின் நம்பர் ஓன் பவுலராக திகழ்ந்து வருகிறார்.

Steyn

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்தவர், தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சாதித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்காக அதிக டி20 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மொத்தம் 62 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டிகளில் இந்த சாதனையை டேல் ஸ்டெயின் . இம்ரான் தாகிர் 35 போட்டிகளில் 61 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவே தென்னாபிரிக்கா அணி சார்பில் எடுக்கப்ட்ட அதிக விக்கெட்டுகள் சாதனையாக இருக்கிறது.

Steyn

ஆனால் ஸ்டெய்ன் தற்போது 45 போட்டியில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதே பட்டியலில் மொத்தமாக இலங்கையின் லசித் மலிங்கா 106 விக்கெட்டுகளையும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாகித் அப்ரிடி 96 விக்கெட்டுகளும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.