- Advertisement -
டி20

87/5 டூ 88க்கு ஆல் அவுட்.. 5 பந்தில் 5 விக்கெட்ஸ்.. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அயர்லாந்து வீரர் உலக சாதனை

அயர்லாந்து நாட்டில் உள்ளூர் மாகாண டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 10ஆம் தேதி டப்லின் நகரில் 23வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் மற்றும் நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற முன்ஸ்டர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 188/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பீட்டர் மோர் 35 (16), கேப்டன் கூர்டீஸ் கேம்பர் 44 (24) ரன்களை எடுத்து அசத்தினார்கள். நார்த் வெஸ்ட் அணிக்கு அதிகபட்சமாக ஆன்டி மெக்பிரின் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய நார்த் வெஸ்ட் அணிக்கு ஷாம் டாப்பிங் 8, ஆன்ட்டி பால்பிரின் 10, ஜேக் ஈகன் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

5 பந்தில் 5 விக்கெட்ஸ்:

அதனால் 29/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் ஆண்டி மெக்பரின் 29, ஸ்காட் மெக்பெத் 33 ரன்கள் எடுத்துப் போராடி அவுட்டானார்கள். அதன் காரணமாக 87/5 என மீண்டும் தடுமாறிய அந்த அணிக்கு 12வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் கவின் ரௌல்ஸ்டன், ஜார்ட் வில்சன் ஆகியோர் கூர்டீஸ் கேம்பர் வேகத்தில் டக் அவுட்டானார்கள்.

அதோடு நிற்காத கேம்பர் 14வது ஓவரில் மீண்டும் வந்து முதல் 3 பந்துகளில் கிராகம் ஹும், ராபி மில்லர், ஜோஸ் வில்சன் ஆகியோரையும் அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார். அந்த வகையில் 11.5, 11.6, 13.1, 13.2, 13.3 என அடுத்தடுத்து 5 பந்துகளில் கூர்டீஸ் கேம்பர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் இந்த உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

உலக சாதனை:

இதற்கு முன் உள்ளூர் முதல் சர்வதேசம் வரை எந்த வகையான கிரிக்கெட்டிலும் யாரும் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. லசித் மலிங்கா, ரஷித் கான், கூர்டீஸ் கேம்பர் (2021இல்), ஜேசன் ஹோல்டர், வாசிம் யாக்பூர், ஹெர்ணன் பேனல் ஆகியோர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். கூர்டீஸ் கேம்பர் மட்டுமே 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணி சாய் சுதர்சனுக்கு செய்தது நியாயமே இல்ல.. தமிழக வீரருக்காக சப்போர்ட் செய்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

அதனால் நார்த் வெஸ்ட் அணியை 88 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த முன்ஸ்டர்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 2.3 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்த கேம்பர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அத்துடன் பேட்டிங்கில் 44 ரன்கள் எடுத்த அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -