
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா போல ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை கிரிக்கெட் அணிகள் கருதப்படுகின்றன. சொல்லப்போனால் மும்பை மற்றும் சென்னை ஆகிய 2 அணிகளுமே தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளன. அந்த இரு அணிகளுக்கிடையே சென்னை அணியை 2013, 2021 ஐபிஎல் ஃபைனல் உட்பட மும்பை அணி அதிக (37) முறை தோற்கடித்து சாதனை படைத்துள்ளது.
அதனால் எப்போதும் மும்பை அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சிஎஸ்கே விளையாடுவது வழக்கமாகும். அதே போல தரமான சிஎஸ்கே அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடன் மும்பை விளையாடுவது வாடிக்கையாகும். இதற்கிடையே சிஎஸ்கே அணிக்கு ஆர்சிபி அணியும் கடுமையான போட்டியை கொடுக்கக்கூடிய பரம எதிரி என்று அந்த அணி ரசிகர்கள் பேசுவது வழக்கமாகும்.
உண்மையில் சென்னை 5 கோப்பைகளை வென்றுள்ள நிலையில் ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. இருப்பினும் தமிழ்நாடு – கர்நாடக ஆகிய அண்டை மாநிலங்களின் தலைநகரங்களை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மையமாகக் கொண்டுள்ளன. மேலும் 2011 ஃபைனல் உட்பட ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியை அதிக (27) முறை சிஎஸ்கே தோற்கடித்துள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2023 சீசனில் கடைசிப் போட்டியில் சென்னையை தோற்கடித்த ஆர்சிபி தொடரிலிருந்து வெளியேற்றியது. அந்த வெற்றியை கோப்பையை வென்றது போல் வெறித்தனமாக கொண்டாடிய பெங்களூரு கடைசியில் பிளே ஆஃப் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. இந்நிலையில் மும்பை அளவுக்கு சிஎஸ்கே அணிக்கு ஆர்சிபி தகுதியான பரம எதிரி கிடையாது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றி முடிவுகள் நெருக்கமாக அல்லது சமமாக இருக்கும் போது மட்டுமே உண்மையான போட்டி உருவாகிறது. ஆனால் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையேயான போட்டிகள் இதுவரை ஒருதலைபட்சமாக உள்ளது என்பதே உண்மையாகும். இம்முறை (2023) கண்டிப்பாக சிஎஸ்கே ஒரு முக்கிய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது”
இதையும் படிங்க: 2015லயே விராட் கோலி எனக்காக தலை வணங்குனாரு.. அவர்கிட்ட 2 விஷயத்தை கத்துக்கிட்டேன்.. சர்பராஸ் கான்
“அப்போட்டியில் ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை ஒன்றை உருவாக்கியது. அப்போட்டியில் பந்து எதிர்பார்த்ததை விட திரும்பியது. அதனால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி கடைசியில் சிஎஸ்கே அணிக்கு பெரிய தோல்வியை கொடுத்தது. எனவே ஆம் அங்கே கொஞ்சம் போட்டி இருக்கிறது. ஆனால் அந்தப் போட்டி (ரிவல்ரி) உண்மையாக சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி நிறைய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.