சென்னை அணி மீண்டும் செம திரில் வெற்றி!

csk-kkr
- Advertisement -

சென்னை சூப்பர்கிங்ஸ்–கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.

பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.

- Advertisement -

raina-csk

அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1சிக்ஸருடன் 26 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சென்னை அணி தரப்பில் பிராவோ 3ஓவர்கள் வீசி 50 ரன்களை வாரி வழங்கினார்.

rydu

முன்னதாக 18 வது ஓவரின் போது மைதானத்திலிருந்து கருப்புக்கொடி காட்டப்பட்டது. பின்னர் மைதானத்தில் கருப்புக்கொடி காட்டிய நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்து வெளியேற்றப்பட்டனர்.

- Advertisement -

அடுத்ததாக சென்னை அணி 20ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது.

சென்னை அணியின் சார்பில் ஷேன்வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.

20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5.5 ஓவர்களில் 75 ரன்களை கடந்திருந்தபோது 19 பந்துகளில் 3பவுண்டரிகள்,3சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷேன்வாட்சன் கொல்கத்தா அணி பந்துவீச்சாளரான டாம் கர்ரேய்ன் பந்தை தூக்கியடிக்க முற்பட்டு ரிங்குசிங்கிடம் கேட்ச் தந்து அவுட் ஆனார்.

பின்னர் அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார் சுரேஷ்ரெய்னா. சென்னை அணி 8.3 ஓவர்களில் 85 ரன்களை கடந்திருந்த போது அம்பத்தி ராயுடு 26 பந்துகளில் 3பவுண்டரிகள்,2சிக்ஸர்களுடன் 39ரன்களை எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நான்காவது ஆட்டக்காரராக தோனி களமிறங்கினார்.

சுரேஷ்ரெய்னா விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நொண்டி நொண்டி மைதானத்தில் நடக்க தொடங்கினார்.

தன்னால் ஓடி ரன்சேர்க்க முடியாததால் பெரிய ஷாட்டுகளை ஆட முயற்சிசெய்து சுனில் நரேன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து வினய் குமாரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.

சுரேஷ்ரெய்னா 12 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 14 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

பின்னர் சாம் பில்லிங்ஸ் கேப்டன் தோனியுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் சீரான இடைவேளியில் பவுண்டரிகளையும்,சிக்ஸர்களையும் விளாச சென்னை அணி வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

தோனி 28பந்துகளில் 1பவுண்டரி மற்றும் ஒரு சிகஸருடன் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பியூஷ் சாவ்லா பந்தில் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழக்க அடுத்ததாக ஜடேஜா களமிறங்கினார்.

அபாரமாக விளையாடிய பில்லிங்ஸ் 23பந்துகளில் 5சிக்ஸர்கள் மற்றும் 2பவுண்டரிகளுடன் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பில்லிங்ஸ் ஆட்டமிழந்தவுடன் பிராவோ களத்தில் இறங்க கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிபெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

billings

ஆட்டத்தின் கடைசி ஓவரை வினய் குமார் வீச முதல்பந்தில் பிராவோ ஒற்றை கையில் சிக்ஸர் விளாசிட சென்னை அணி வெற்றிபெற 5 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் வீசிய அடுத்த பந்தை பிராவோ தூக்கியடிக்க நோபாலுடன் 2ரன்ளும் கிடைத்தது. அடுத்த பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க, 3வது பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க சென்னை அணி வெற்றி பெற கடைசி மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் மீண்டும் ஒரு ரன் எடுத்திட, கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்களை தேவை என்கிற பரபரப்பான சூழலில் வினய்குமார் வீசிய 5வது பந்தில் அபாரமாக சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

சென்னை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 203 ரன்களை எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றவுடன் தன்னுடைய இரண்டாவது வெற்றியையும் இந்த ஐபிஎல் சீசனில் பதிவுசெய்தது.

Advertisement