CSK vs GT : மழை வந்தா என்ன? 9.35 மணி வரைக்கும் பிரச்சனை இல்ல – ஆனா அதுக்கு மேலயும் லேட் ஆனா என்ன ஆகும்?

Rain
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவக்க இருந்தது. ஆனால் அகமதாபாதிக் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மழை நின்ற பின் போட்டி விரைவாக துவங்கும் என்று அனைவரும் தயாராக காத்திருக்கின்றனர்.

CSK vs GT

ஆனாலும் இதுவரை மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இன்று முழுவதும் மழை பெய்தால் நாளை ரிசர்வ் டே-யில் போட்டி நடைபெறும்.

- Advertisement -

ஆனால் இன்றே முழுப்போட்டியும் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மைதானத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஓவர்கள் எவ்வாறு குறைக்கப்படும், போட்டி எத்தனை மணி வரை நடைபெற சாத்தியம் இருக்கும் என்ற பல தெளிவான தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Motera

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி (8.40pm) போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டி 9.40pm மணிக்குள் துவங்கினால் போட்டியில் எந்தவொரு ஓவரும் குறைக்கப்படாமல் முழுவதுமாக 20 ஓவர்கள் நடைபெறும். ஆனால் 9.40 யையும் தாண்டி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் போட்டியில் குறிப்பிட்ட ஓவர்கள் குறைக்கப்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs GT : என்னது சி.எஸ்.கே ரன்னரா? மைதானத்தில் ஜொலித்த மின் பலகையால் – சென்னை ரசிகர்கள் அச்சம், உண்மை என்ன

இருப்பினும் தொடர்ந்து மழை பெய்தால் கடைசி வாய்ப்பாக 11.56pm வரை கால அவகாசம் இருக்கிறது. அப்படி இரவு 11.56pm மணிக்கு போட்டி துவங்கினால் இரு அணிகளுக்கும் தலா 5 ஓவர்கள் மட்டுமே விளையாட அனுமதி கொடுக்கப்படும். அதையும் தாண்டி மழை பெய்தால் போட்டி நாளைக்கு மே 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement